கஜினி போன்ற வெற்றிப்படங்களையும், அதற்கப்புறம் சில 'வெட்டி' படங்களையும் எடுத்தவர்
சேலம் சந்திரசேகர். பிரபல விநியோகஸ்தரான இவரை, இவர் தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்த படங்கள் படுகுழியில் தள்ளிவிட கடந்த பல வருடங்களாகவே கடும் பண நெருக்கடியில் இருந்தார் அவர். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அவர் தயாரித்து வந்த 'கில்லாடி' படமும் அரைகுறையாக வளராமல் நின்றது.
சேலம் சந்திரசேகர். பிரபல விநியோகஸ்தரான இவரை, இவர் தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்த படங்கள் படுகுழியில் தள்ளிவிட கடந்த பல வருடங்களாகவே கடும் பண நெருக்கடியில் இருந்தார் அவர். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அவர் தயாரித்து வந்த 'கில்லாடி' படமும் அரைகுறையாக வளராமல் நின்றது.
சக்கரம் ஒரே இடத்தில் நிற்காதல்லவா? மீண்டும் பழைய புத்துணர்ச்சியோடு கிளம்பி வந்துவிட்டார் சந்திரசேகர். நின்று போயிருந்த கில்லாடியை து£சு தட்டி எடுக்க வேண்டிய காட்சிகளை மீண்டும் எடுத்து அதே பரபர வேக ஆக்ஷன் படமாக உருவாக்கிவிட்டார். (சாம்பிளுக்கு காட்டப்பட்ட ட்ரெய்லர், ஹரி படம் மாதிரி செம கெத்து!) பரத், நிலா, விவேக், வின்சென்ட் அசோகன் என்று முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய விவேக், தனது பாணியில் அடித்துக் கிளப்ப மொத்த கூட்டமும் கைதட்டி மகிழ்ந்தது.
ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றால் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன் என்று பலரும் வந்திருப்பார்கள். ஆனால் இந்த மேடையில் வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதிபதியாக வரப்போகிறவர் என்று பலரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது, சேலம் சந்திரசேகர் எந்தளவுக்கு அந்து அவலாகி நொந்து நு£லாகியிருக்கிறார் என்று?
முன்பு மாதிரியா இருக்கிறது சினிமா? முன்னெல்லாம் தேவர் பிலிம்ஸ்சுன்னு டைட்டில் வரும். ஏவிஎம்முன்னு டைட்டில் வரும். இப்போ ஒரு படத்தை எடுக்கிறவர் அதை இன்னொருத்தருக்கு விற்கிறார். அதை அவரு இன்னொருத்தரிடம் தள்ளிவிடுறார். இது போதாதுன்னு 'டை அப்'புன்னு வேறொருத்தர் பேரும் வருது. அது கூட பரவாயில்ல, அதுக்கப்புறம் நன்றின்னு டைட்டில் கார்டு போடுவாங்க பாருங்க... அதுல ஊர்ல இருக்கிறவங்க அத்தனை பேரும் வருது. அப்பப்பா. அந்தளவுக்கு கஷ்டமா இருக்கு இன்னைக்கு ஒரு சினிமாவை எடுத்து ரிலீஸ் பண்ணுற விஷயம்.
இன்னைக்கு சேலம் சந்திரசேகர் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் தனது கில்லாடி படத்தை மீண்டும் உருவாக்கி கொண்டு வர்றார்னா அவரை பாராட்டணும் என்றார். அப்படியே அவர் சொன்ன நிலா கதை அத்தனை பேரையும் ரிலாக்ஸ் ஆக்கியது.
ஒருத்தன் அவங்க அப்பாகிட்ட எனக்கு வரப்போற மனைவி நிலா மாதிரி இருக்கணும்னு சொன்னான். அவ்வளவு குளிச்சியா இருக்கணுமான்னு கேட்டாரு அவரு.
நிஜமா அவன் என்ன அர்த்தத்துல கேட்டான் தெரியுமா? நிலா ராத்திரி வரும். பகல்ல போயிரும். இவன் கேட்கிற நிலாவும் ராத்திரி வரணும். பகல்ல போயிரணுமாம்... என்று விவேக் சொல்ல சொல்ல அந்த இசை வெளியிட்டு விழா, ஜோக் வெளியீட்டு விழாவாகவே மாறிப்போனது!
முக்கிய குறிப்பு: இந்த படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்களாம். இதே போல தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
முன்புதான் கடுமையான ஜுரம் வந்தது அவருக்கு. இப்போது என்னடா என்றால், ஐந்தாறு நாட்களாக ஆளே வெளியே தலைகாட்டவில்லை.
மர்மமாகவே இருக்கிறது. அந்த புதிரை அவிழ்க்கும் திரைப்படமாக வரப்போகிறது 'நடிகையின் கதை'. (அந்த டாக்டர் இப்பவும் உயிரோடதான் இருக்காராம்) அவரது மரணத்தை வேறெந்த மொழி படமும் இவ்வளவு விரிவாக அலசியிருக்காது. தமிழில் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆதி. இவர்தான் தமிழ் சில்க் கதைக்கு அத்தாரிடி! மலையாளத்தில் 'க்ளைமாக்ஸ்' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தை அதே நாளில் தமிழிலும் வெளியிடப் போகிறார்கள். இப்படத்தின் தமிழ் பெயர்தான் 'நடிகையின் டைரி'.
யாருக்கும் ரைட்ஸ் கிடையாது' என்று ட்விட்டரில் கோபப்பட்டிருக்கிறார் சித்தார்த். வாதம் என்று எடுத்துக் கொண்டால் சித்தார்த்தின் கருத்து சரிதான். இருந்தாலும் பிரபலங்கள் 'பினாயில்' வாங்கினால் கூட அதை எட்டு கால நியூசாக்கும் ஊடகங்கள் இதை எப்படி சும்மா விடும்?
பட நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
வைரி. (அப்படீன்னா எதிரின்னு அர்த்தங்ணா..) பசையுள்ள நேரத்தில் 'பார்ப்போம் ஒரு கை' என்று அஜீத்திடம் மல்லுக்கு நின்ற ஏ.எம்.ரத்னம் அதன்பின் சரண்டர் ஆனது எப்போது தெரியுமா? இதே அஜீத்தே ரத்னத்திற்கு வலிய வந்து கால்ஷீட் கொடுத்தபோதுதான். 'எல்லாம் சாய்ராம் செயல்' என்று ஆபிஸ் வாசலிலேயே சாய்பாபா கோவிலை கட்டிவிட்டார் ரத்னம். அந்தளவுக்கு கடனிலிருந்து இவரை மீட்டார்கள் கண்ணுக்கு தெரியாத சாய்ராமும், கண்ணுக்கு தெரிந்த அஜீத்தும்.
ஹீரோக்கள் பலருக்கு இருக்கிறது. இந்த அவஸ்தையை பெரும்பாலும் அனுபவிப்பது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கும் புதுமுக நடிகைகள்தான். ஆனால் மும்பை நடிகையான அபர்ணா பாஜ்பாய்க்கும் அப்படி ஒரு வேதனையான விஷயம் நடந்ததுதான் ஆச்சர்யம்.