Wednesday 27 March 2013

நிலா, ராத்திரியில வரணும். பகல்ல போயிரணும்... 'கில்லாடி' விழாவில் விவேக் கலகலப்பு!


கஜினி போன்ற வெற்றிப்படங்களையும், அதற்கப்புறம் சில 'வெட்டி' படங்களையும் எடுத்தவர்சேலம் சந்திரசேகர். பிரபல விநியோகஸ்தரான இவரை, இவர் தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்த படங்கள் படுகுழியில் தள்ளிவிட கடந்த பல வருடங்களாகவே கடும் பண நெருக்கடியில் இருந்தார் அவர். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அவர் தயாரித்து வந்த 'கில்லாடி' படமும் அரைகுறையாக வளராமல் நின்றது.
சக்கரம் ஒரே இடத்தில் நிற்காதல்லவா? மீண்டும் பழைய புத்துணர்ச்சியோடு கிளம்பி வந்துவிட்டார் சந்திரசேகர். நின்று போயிருந்த கில்லாடியை து£சு தட்டி எடுக்க வேண்டிய காட்சிகளை மீண்டும் எடுத்து அதே பரபர வேக ஆக்ஷன் படமாக உருவாக்கிவிட்டார். (சாம்பிளுக்கு காட்டப்பட்ட ட்ரெய்லர், ஹரி படம் மாதிரி செம கெத்து!) பரத், நிலா, விவேக், வின்சென்ட் அசோகன் என்று முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய விவேக், தனது பாணியில் அடித்துக் கிளப்ப மொத்த கூட்டமும் கைதட்டி மகிழ்ந்தது.
ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றால் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன் என்று பலரும் வந்திருப்பார்கள். ஆனால் இந்த மேடையில் வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதிபதியாக வரப்போகிறவர் என்று பலரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது, சேலம் சந்திரசேகர் எந்தளவுக்கு அந்து அவலாகி நொந்து நு£லாகியிருக்கிறார் என்று?
முன்பு மாதிரியா இருக்கிறது சினிமா? முன்னெல்லாம் தேவர் பிலிம்ஸ்சுன்னு டைட்டில் வரும். ஏவிஎம்முன்னு டைட்டில் வரும். இப்போ ஒரு படத்தை எடுக்கிறவர் அதை இன்னொருத்தருக்கு விற்கிறார். அதை அவரு இன்னொருத்தரிடம் தள்ளிவிடுறார். இது போதாதுன்னு 'டை அப்'புன்னு வேறொருத்தர் பேரும் வருது. அது கூட பரவாயில்ல, அதுக்கப்புறம் நன்றின்னு டைட்டில் கார்டு போடுவாங்க பாருங்க... அதுல ஊர்ல இருக்கிறவங்க அத்தனை பேரும் வருது. அப்பப்பா. அந்தளவுக்கு கஷ்டமா இருக்கு இன்னைக்கு ஒரு சினிமாவை எடுத்து ரிலீஸ் பண்ணுற விஷயம்.
இன்னைக்கு சேலம் சந்திரசேகர் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் தனது கில்லாடி படத்தை மீண்டும் உருவாக்கி கொண்டு வர்றார்னா அவரை பாராட்டணும் என்றார். அப்படியே அவர் சொன்ன நிலா கதை அத்தனை பேரையும் ரிலாக்ஸ் ஆக்கியது.
ஒருத்தன் அவங்க அப்பாகிட்ட எனக்கு வரப்போற மனைவி நிலா மாதிரி இருக்கணும்னு சொன்னான். அவ்வளவு குளிச்சியா இருக்கணுமான்னு கேட்டாரு அவரு.
நிஜமா அவன் என்ன அர்த்தத்துல கேட்டான் தெரியுமா? நிலா ராத்திரி வரும். பகல்ல போயிரும். இவன் கேட்கிற நிலாவும் ராத்திரி வரணும். பகல்ல போயிரணுமாம்... என்று விவேக் சொல்ல சொல்ல அந்த இசை வெளியிட்டு விழா, ஜோக் வெளியீட்டு விழாவாகவே மாறிப்போனது!
முக்கிய குறிப்பு: இந்த படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்களாம். இதே போல தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment