Wednesday 27 March 2013

நிலா, ராத்திரியில வரணும். பகல்ல போயிரணும்... 'கில்லாடி' விழாவில் விவேக் கலகலப்பு!


கஜினி போன்ற வெற்றிப்படங்களையும், அதற்கப்புறம் சில 'வெட்டி' படங்களையும் எடுத்தவர்சேலம் சந்திரசேகர். பிரபல விநியோகஸ்தரான இவரை, இவர் தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்த படங்கள் படுகுழியில் தள்ளிவிட கடந்த பல வருடங்களாகவே கடும் பண நெருக்கடியில் இருந்தார் அவர். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அவர் தயாரித்து வந்த 'கில்லாடி' படமும் அரைகுறையாக வளராமல் நின்றது.
சக்கரம் ஒரே இடத்தில் நிற்காதல்லவா? மீண்டும் பழைய புத்துணர்ச்சியோடு கிளம்பி வந்துவிட்டார் சந்திரசேகர். நின்று போயிருந்த கில்லாடியை து£சு தட்டி எடுக்க வேண்டிய காட்சிகளை மீண்டும் எடுத்து அதே பரபர வேக ஆக்ஷன் படமாக உருவாக்கிவிட்டார். (சாம்பிளுக்கு காட்டப்பட்ட ட்ரெய்லர், ஹரி படம் மாதிரி செம கெத்து!) பரத், நிலா, விவேக், வின்சென்ட் அசோகன் என்று முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய விவேக், தனது பாணியில் அடித்துக் கிளப்ப மொத்த கூட்டமும் கைதட்டி மகிழ்ந்தது.
ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றால் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன் என்று பலரும் வந்திருப்பார்கள். ஆனால் இந்த மேடையில் வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதிபதியாக வரப்போகிறவர் என்று பலரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது, சேலம் சந்திரசேகர் எந்தளவுக்கு அந்து அவலாகி நொந்து நு£லாகியிருக்கிறார் என்று?
முன்பு மாதிரியா இருக்கிறது சினிமா? முன்னெல்லாம் தேவர் பிலிம்ஸ்சுன்னு டைட்டில் வரும். ஏவிஎம்முன்னு டைட்டில் வரும். இப்போ ஒரு படத்தை எடுக்கிறவர் அதை இன்னொருத்தருக்கு விற்கிறார். அதை அவரு இன்னொருத்தரிடம் தள்ளிவிடுறார். இது போதாதுன்னு 'டை அப்'புன்னு வேறொருத்தர் பேரும் வருது. அது கூட பரவாயில்ல, அதுக்கப்புறம் நன்றின்னு டைட்டில் கார்டு போடுவாங்க பாருங்க... அதுல ஊர்ல இருக்கிறவங்க அத்தனை பேரும் வருது. அப்பப்பா. அந்தளவுக்கு கஷ்டமா இருக்கு இன்னைக்கு ஒரு சினிமாவை எடுத்து ரிலீஸ் பண்ணுற விஷயம்.
இன்னைக்கு சேலம் சந்திரசேகர் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் தனது கில்லாடி படத்தை மீண்டும் உருவாக்கி கொண்டு வர்றார்னா அவரை பாராட்டணும் என்றார். அப்படியே அவர் சொன்ன நிலா கதை அத்தனை பேரையும் ரிலாக்ஸ் ஆக்கியது.
ஒருத்தன் அவங்க அப்பாகிட்ட எனக்கு வரப்போற மனைவி நிலா மாதிரி இருக்கணும்னு சொன்னான். அவ்வளவு குளிச்சியா இருக்கணுமான்னு கேட்டாரு அவரு.
நிஜமா அவன் என்ன அர்த்தத்துல கேட்டான் தெரியுமா? நிலா ராத்திரி வரும். பகல்ல போயிரும். இவன் கேட்கிற நிலாவும் ராத்திரி வரணும். பகல்ல போயிரணுமாம்... என்று விவேக் சொல்ல சொல்ல அந்த இசை வெளியிட்டு விழா, ஜோக் வெளியீட்டு விழாவாகவே மாறிப்போனது!
முக்கிய குறிப்பு: இந்த படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்களாம். இதே போல தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

உடம்புக்கு முடியலயாம் த்ரிஷாவுக்கு கவலைப்படும் ரசிகர் வட்டாரம்


இப்போதெல்லாம் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது த்ரிஷாவுக்கு. சில மாதங்களுக்குActress Trishaமுன்புதான் கடுமையான ஜுரம் வந்தது அவருக்கு. இப்போது என்னடா என்றால், ஐந்தாறு நாட்களாக ஆளே வெளியே தலைகாட்டவில்லை.
ஏன் என்று பதறிப்போன அவரது தோழிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு விசாரித்தால், மீண்டும் 'உடம்பு சரியில்லை' என்கிற பதிலே வந்ததாம்.
அவரது நலம் விரும்பிகள் நடத்திவரும் சமூக வலைதளங்களில் 'கெட் வெல் சூன்' என்று கரைந்து கரைந்து உருகிறார்கள் த்ரிஷாவின் ரசிகர்கள்.
முன்பு போல படங்கள் இல்லை. அப்படியே வருகிற படங்களும் ஓடுவதாக இல்லை. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், பொண்ணுக்கு விசனம் ஜாஸ்தியாகிவிட்டதோ என தோன்றுகிறது.
வெல்வெட்டு ரோசாவா இருந்தாலும், அதன்மேல் கல் விட்டு எறியறதே விதியோட வேலையா போச்சு.

மர்மம் விலகாத சில்க் மரணம் தோலுரிக்கும் படம்தானாம் இது


செத்தும் கொடுத்தாள் சிங்காரி கதையாகிவிட்டது சில்க் வாழ்க்கை. சில்க் இறப்பு இன்னமும்Nadikayin Diaryமர்மமாகவே இருக்கிறது. அந்த புதிரை அவிழ்க்கும் திரைப்படமாக வரப்போகிறது 'நடிகையின் கதை'. (அந்த டாக்டர் இப்பவும் உயிரோடதான் இருக்காராம்) அவரது மரணத்தை வேறெந்த மொழி படமும் இவ்வளவு விரிவாக அலசியிருக்காது. தமிழில் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆதி. இவர்தான் தமிழ் சில்க் கதைக்கு அத்தாரிடி! மலையாளத்தில் 'க்ளைமாக்ஸ்' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தை அதே நாளில் தமிழிலும் வெளியிடப் போகிறார்கள். இப்படத்தின் தமிழ் பெயர்தான் 'நடிகையின் டைரி'.
அங்கே இல்லாதது சில இங்கே இருக்குமாம். அதுதான் நடிகையின் டைரி விசேஷம். மலையாளத்தில் சில பகுதிகளை எடிட்டர் கட் பண்ணி வீசினாரல்லவா? அதை கவனமாக தேடியெடுத்து நடிகையின் கதையில் சேர்த்திருக்கிறார்களாம்.
கன்னடத்தில் வீணா மாலிக் நடிக்க இதே சில்க்கின் கதையை படமாக்கி வருகிறார்கள். ரிலீஸ் நேரத்தில் அதற்கு கோர்ட் தடை விதித்துவிட்டது. ஏன் தெரியுமா? இந்த படத்திற்கு 'டர்ட்டி பிக்சர்' என்று பெயர் வைத்திருந்தார்களாம். இந்தியில் உருவாகி வித்யாபாலன் நடித்த படத்திற்கும் இதே பெயர்தான். இப்படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், வீணா மாலிக் படத்திற்கு தடை வாங்கிவிட்டார்.
இப்படி சுற்றி சுற்றி சில்க்கை ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவை இலையில் வைத்து கொடுத்தால் என்ன, தட்டில் வைத்து கொடுத்தால் என்ன? ருசி ருசிதான்!

கோயில் விசிட்? குளறுபடியான சமந்தா மார்க்கெட்...


இது பட்டாபிஷேகமா, கெட்டாபிஷேகமா என்பதே தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது சமந்தாவின் கோயில் விசிட்! 'நாங்க கோவிலுக்கு வந்தது எங்க பர்சனல். அதை பற்றி கிளறSidharth - Samanthaயாருக்கும் ரைட்ஸ் கிடையாது' என்று ட்விட்டரில் கோபப்பட்டிருக்கிறார் சித்தார்த். வாதம் என்று எடுத்துக் கொண்டால் சித்தார்த்தின் கருத்து சரிதான். இருந்தாலும் பிரபலங்கள் 'பினாயில்' வாங்கினால் கூட அதை எட்டு கால நியூசாக்கும் ஊடகங்கள் இதை எப்படி சும்மா விடும்?
சரி விஷயத்துக்கு வருவோம். சமந்தாவும் சித்தார்த்தும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தியை படித்த நாளிலிருந்து கெட்ட சொப்பனம் பிடித்தலைகிறார்கள் கோடம்பாக்கத்தில் பலர். 'என்னோட அடுத்த படத்துல சமந்தாதான் ஹீரோயின்' என்று சொல்லி வந்த பிரபல டைரக்டர்கள் கூட ரூட்டை மாத்து என்று வேறு வேறு நடிகைகளின் மொபைல் நம்பர்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள்-.
முதல் சந்தேகம் லிங்குசாமி அலுவலகத்திலிருந்துதான் என்கிறது கோடம்பாக்கத்து எலி. இவர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தாவைதான் யோசித்து வைத்திருந்தாராம். அந்த எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறதாம். அவரை சொல்லி குற்றமில்லை. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகப் போகிறது என்ற தகவலை கேட்டாலே போதும், ஒரு சின்ன 'கட்'டிங்கில் ஒரு வாட்டர் பாட்டிலையே நிரப்பிய மாதிரி நீர்த்துப் போகிறது அவரவர் மிக்சிங்!
அதனால், கோடிக்கணக்கில் கொட்டுவதற்கு முன்பு நாலும் பார்ப்பது நல்லதுதானே!

Friday 22 March 2013

சித்தார்த் சமந்தா லவ்வுக்கு காரணமான படத்திற்கு தடை!


சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் 'ஜாபர்தஸ்த்' கடந்த மாதம் ஆந்திரா முழுவதும் இப்படம் ரிலீசானது. தற்போது தமிழில் இதை 'டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர்.
இதற்கிடையில் 'ஜாபர்தஸ்த்' படத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த யாஷ்ராஜ் பிலிம் என்றJabardasthபட நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
'பேண்ட் பாஜாபரத்' என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் 'ஜாபர்தஸ்த்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் 'டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு 'ஜாபர்தஸ்த்' படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடகூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் சித்தார்த் சமந்தா ஜோடிக்கிடையே காதல் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டும் டும் டும்முக்கு கோர்ட் தடை விதித்திருப்பது இந்த ஜோடியின் நிஜ டும் டும் டும்முக்கே தடை விதித்தது போல இருக்கிறது. (எத்தனை முறை வேண்டுமானாலும் லவ் வரும். எத்தனை முறை வேண்டுமென்றாலும் கல்யாணமும் வரும். நல்ல பாலிஸி)

மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு!


மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு! ஆமாம்... தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் வலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஒரு காலத்தில் அஜீத்தின் பரமActor Ajithவைரி. (அப்படீன்னா எதிரின்னு அர்த்தங்ணா..) பசையுள்ள நேரத்தில் 'பார்ப்போம் ஒரு கை' என்று அஜீத்திடம் மல்லுக்கு நின்ற ஏ.எம்.ரத்னம் அதன்பின் சரண்டர் ஆனது எப்போது தெரியுமா? இதே அஜீத்தே ரத்னத்திற்கு வலிய வந்து கால்ஷீட் கொடுத்தபோதுதான். 'எல்லாம் சாய்ராம் செயல்' என்று ஆபிஸ் வாசலிலேயே சாய்பாபா கோவிலை கட்டிவிட்டார் ரத்னம். அந்தளவுக்கு கடனிலிருந்து இவரை மீட்டார்கள் கண்ணுக்கு தெரியாத சாய்ராமும், கண்ணுக்கு தெரிந்த அஜீத்தும்.
இதோ- மறுபடியும் அஜீத்தின் மன்னிப்பு படலம் தொடர்கிறது.
தோள் கொடுக்கும் தோழனாக ஒரு காலத்தில் அஜீத்தின் அருகிலேயே இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு இப்போது மீண்டும் நட்பு கரம் நீட்டியிருக்கிறாராம் அஜீத். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று இருவருமே கசப்பு காலங்களை எரேஸ் பண்ணியது இன்டஸ்ட்ரியே மகிழ வேண்டிய சங்கதி.
சக்கரவர்த்தி கஷ்டத்திலிருக்காரு. அவருக்கு நான் உதவணும். அதனால் நம்ம இணைந்து தரப்போற படத்தை அவர் பேனர்ல பண்ணினால் என்ன என்றாராம் முருகதாசிடம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகியிருக்கிறது.
இன்னொரு கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டுங்கண்ணே... சாய்ராம்!

அந்த முத்தம் வேணாம் இந்த முத்தம் வேணும்...


வில்லேஜிலிருந்து நடிக்க வந்தவர் என்றால் கொஞ்சம் மட்டமாக பார்க்கும் வழக்கம் பிரபலKarupampattiஹீரோக்கள் பலருக்கு இருக்கிறது. இந்த அவஸ்தையை பெரும்பாலும் அனுபவிப்பது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கும் புதுமுக நடிகைகள்தான். ஆனால் மும்பை நடிகையான அபர்ணா பாஜ்பாய்க்கும் அப்படி ஒரு வேதனையான விஷயம் நடந்ததுதான் ஆச்சர்யம்.
அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் கருப்பம்பட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர்தான் அபர்ணா. இவருக்கு படத்தில் வில்லேஜ் கேர்ள் வேஷமாம். இதே அஜ்மலுக்கு இன்னொரு ஜோடியும் இருக்கிறார் படத்தில். அவர் வெளிநாட்டு அழகி. கதைப்படி இந்த வில்லேஜ் ஹீரோயினுக்கு லிப் கிஸ் கொடுக்க வேண்டுமாம் அஜ்மல். ஆனால் ஐயய்யோ என்று பின்வாங்கிய அஜ்மல், ஏங்க எனக்கு குடும்பம்னு ஒண்ணு இருக்கு. மனைவிக்கு பதில் சொல்லணும் புரிஞ்சுக்கோங்க என்று கூறிவிட்டு அந்த முத்தக்காட்சியை எடுக்க விடாமலே தடுத்துவிட்டாராம்.
அதற்கப்புறம் வெளிநாட்டு ஹீரோயினோடு இவர் டூயட் பாடுகிற காட்சிகள் சில நாட்களில் எடுக்க வேண்டிய நிலைமை. அப்போது ஸ்பாட்டுக்கு வந்த அஜ்மல், அழகியை பார்த்து கிறங்கிப் போனாராம். சார்... இப்ப வேணும்னா அந்த முத்தக்காட்சியை வைங்க. நான் நடிக்கிறேன் என்று கூற, அதிர்ந்தே போனாராம் டைரக்டர் பிரபுராஜசோழன்.
இந்த விஷயத்தைதான் முதலில் அஜ்மல் வீட்ல போட்டுக் கொடுக்கணும்!