Wednesday, 27 March 2013

நிலா, ராத்திரியில வரணும். பகல்ல போயிரணும்... 'கில்லாடி' விழாவில் விவேக் கலகலப்பு!


கஜினி போன்ற வெற்றிப்படங்களையும், அதற்கப்புறம் சில 'வெட்டி' படங்களையும் எடுத்தவர்சேலம் சந்திரசேகர். பிரபல விநியோகஸ்தரான இவரை, இவர் தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்த படங்கள் படுகுழியில் தள்ளிவிட கடந்த பல வருடங்களாகவே கடும் பண நெருக்கடியில் இருந்தார் அவர். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அவர் தயாரித்து வந்த 'கில்லாடி' படமும் அரைகுறையாக வளராமல் நின்றது.
சக்கரம் ஒரே இடத்தில் நிற்காதல்லவா? மீண்டும் பழைய புத்துணர்ச்சியோடு கிளம்பி வந்துவிட்டார் சந்திரசேகர். நின்று போயிருந்த கில்லாடியை து£சு தட்டி எடுக்க வேண்டிய காட்சிகளை மீண்டும் எடுத்து அதே பரபர வேக ஆக்ஷன் படமாக உருவாக்கிவிட்டார். (சாம்பிளுக்கு காட்டப்பட்ட ட்ரெய்லர், ஹரி படம் மாதிரி செம கெத்து!) பரத், நிலா, விவேக், வின்சென்ட் அசோகன் என்று முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய விவேக், தனது பாணியில் அடித்துக் கிளப்ப மொத்த கூட்டமும் கைதட்டி மகிழ்ந்தது.
ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றால் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன் என்று பலரும் வந்திருப்பார்கள். ஆனால் இந்த மேடையில் வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதிபதியாக வரப்போகிறவர் என்று பலரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது, சேலம் சந்திரசேகர் எந்தளவுக்கு அந்து அவலாகி நொந்து நு£லாகியிருக்கிறார் என்று?
முன்பு மாதிரியா இருக்கிறது சினிமா? முன்னெல்லாம் தேவர் பிலிம்ஸ்சுன்னு டைட்டில் வரும். ஏவிஎம்முன்னு டைட்டில் வரும். இப்போ ஒரு படத்தை எடுக்கிறவர் அதை இன்னொருத்தருக்கு விற்கிறார். அதை அவரு இன்னொருத்தரிடம் தள்ளிவிடுறார். இது போதாதுன்னு 'டை அப்'புன்னு வேறொருத்தர் பேரும் வருது. அது கூட பரவாயில்ல, அதுக்கப்புறம் நன்றின்னு டைட்டில் கார்டு போடுவாங்க பாருங்க... அதுல ஊர்ல இருக்கிறவங்க அத்தனை பேரும் வருது. அப்பப்பா. அந்தளவுக்கு கஷ்டமா இருக்கு இன்னைக்கு ஒரு சினிமாவை எடுத்து ரிலீஸ் பண்ணுற விஷயம்.
இன்னைக்கு சேலம் சந்திரசேகர் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் தனது கில்லாடி படத்தை மீண்டும் உருவாக்கி கொண்டு வர்றார்னா அவரை பாராட்டணும் என்றார். அப்படியே அவர் சொன்ன நிலா கதை அத்தனை பேரையும் ரிலாக்ஸ் ஆக்கியது.
ஒருத்தன் அவங்க அப்பாகிட்ட எனக்கு வரப்போற மனைவி நிலா மாதிரி இருக்கணும்னு சொன்னான். அவ்வளவு குளிச்சியா இருக்கணுமான்னு கேட்டாரு அவரு.
நிஜமா அவன் என்ன அர்த்தத்துல கேட்டான் தெரியுமா? நிலா ராத்திரி வரும். பகல்ல போயிரும். இவன் கேட்கிற நிலாவும் ராத்திரி வரணும். பகல்ல போயிரணுமாம்... என்று விவேக் சொல்ல சொல்ல அந்த இசை வெளியிட்டு விழா, ஜோக் வெளியீட்டு விழாவாகவே மாறிப்போனது!
முக்கிய குறிப்பு: இந்த படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்களாம். இதே போல தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

உடம்புக்கு முடியலயாம் த்ரிஷாவுக்கு கவலைப்படும் ரசிகர் வட்டாரம்


இப்போதெல்லாம் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது த்ரிஷாவுக்கு. சில மாதங்களுக்குActress Trishaமுன்புதான் கடுமையான ஜுரம் வந்தது அவருக்கு. இப்போது என்னடா என்றால், ஐந்தாறு நாட்களாக ஆளே வெளியே தலைகாட்டவில்லை.
ஏன் என்று பதறிப்போன அவரது தோழிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு விசாரித்தால், மீண்டும் 'உடம்பு சரியில்லை' என்கிற பதிலே வந்ததாம்.
அவரது நலம் விரும்பிகள் நடத்திவரும் சமூக வலைதளங்களில் 'கெட் வெல் சூன்' என்று கரைந்து கரைந்து உருகிறார்கள் த்ரிஷாவின் ரசிகர்கள்.
முன்பு போல படங்கள் இல்லை. அப்படியே வருகிற படங்களும் ஓடுவதாக இல்லை. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், பொண்ணுக்கு விசனம் ஜாஸ்தியாகிவிட்டதோ என தோன்றுகிறது.
வெல்வெட்டு ரோசாவா இருந்தாலும், அதன்மேல் கல் விட்டு எறியறதே விதியோட வேலையா போச்சு.

மர்மம் விலகாத சில்க் மரணம் தோலுரிக்கும் படம்தானாம் இது


செத்தும் கொடுத்தாள் சிங்காரி கதையாகிவிட்டது சில்க் வாழ்க்கை. சில்க் இறப்பு இன்னமும்Nadikayin Diaryமர்மமாகவே இருக்கிறது. அந்த புதிரை அவிழ்க்கும் திரைப்படமாக வரப்போகிறது 'நடிகையின் கதை'. (அந்த டாக்டர் இப்பவும் உயிரோடதான் இருக்காராம்) அவரது மரணத்தை வேறெந்த மொழி படமும் இவ்வளவு விரிவாக அலசியிருக்காது. தமிழில் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆதி. இவர்தான் தமிழ் சில்க் கதைக்கு அத்தாரிடி! மலையாளத்தில் 'க்ளைமாக்ஸ்' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தை அதே நாளில் தமிழிலும் வெளியிடப் போகிறார்கள். இப்படத்தின் தமிழ் பெயர்தான் 'நடிகையின் டைரி'.
அங்கே இல்லாதது சில இங்கே இருக்குமாம். அதுதான் நடிகையின் டைரி விசேஷம். மலையாளத்தில் சில பகுதிகளை எடிட்டர் கட் பண்ணி வீசினாரல்லவா? அதை கவனமாக தேடியெடுத்து நடிகையின் கதையில் சேர்த்திருக்கிறார்களாம்.
கன்னடத்தில் வீணா மாலிக் நடிக்க இதே சில்க்கின் கதையை படமாக்கி வருகிறார்கள். ரிலீஸ் நேரத்தில் அதற்கு கோர்ட் தடை விதித்துவிட்டது. ஏன் தெரியுமா? இந்த படத்திற்கு 'டர்ட்டி பிக்சர்' என்று பெயர் வைத்திருந்தார்களாம். இந்தியில் உருவாகி வித்யாபாலன் நடித்த படத்திற்கும் இதே பெயர்தான். இப்படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், வீணா மாலிக் படத்திற்கு தடை வாங்கிவிட்டார்.
இப்படி சுற்றி சுற்றி சில்க்கை ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவை இலையில் வைத்து கொடுத்தால் என்ன, தட்டில் வைத்து கொடுத்தால் என்ன? ருசி ருசிதான்!

கோயில் விசிட்? குளறுபடியான சமந்தா மார்க்கெட்...


இது பட்டாபிஷேகமா, கெட்டாபிஷேகமா என்பதே தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது சமந்தாவின் கோயில் விசிட்! 'நாங்க கோவிலுக்கு வந்தது எங்க பர்சனல். அதை பற்றி கிளறSidharth - Samanthaயாருக்கும் ரைட்ஸ் கிடையாது' என்று ட்விட்டரில் கோபப்பட்டிருக்கிறார் சித்தார்த். வாதம் என்று எடுத்துக் கொண்டால் சித்தார்த்தின் கருத்து சரிதான். இருந்தாலும் பிரபலங்கள் 'பினாயில்' வாங்கினால் கூட அதை எட்டு கால நியூசாக்கும் ஊடகங்கள் இதை எப்படி சும்மா விடும்?
சரி விஷயத்துக்கு வருவோம். சமந்தாவும் சித்தார்த்தும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தியை படித்த நாளிலிருந்து கெட்ட சொப்பனம் பிடித்தலைகிறார்கள் கோடம்பாக்கத்தில் பலர். 'என்னோட அடுத்த படத்துல சமந்தாதான் ஹீரோயின்' என்று சொல்லி வந்த பிரபல டைரக்டர்கள் கூட ரூட்டை மாத்து என்று வேறு வேறு நடிகைகளின் மொபைல் நம்பர்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள்-.
முதல் சந்தேகம் லிங்குசாமி அலுவலகத்திலிருந்துதான் என்கிறது கோடம்பாக்கத்து எலி. இவர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தாவைதான் யோசித்து வைத்திருந்தாராம். அந்த எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறதாம். அவரை சொல்லி குற்றமில்லை. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகப் போகிறது என்ற தகவலை கேட்டாலே போதும், ஒரு சின்ன 'கட்'டிங்கில் ஒரு வாட்டர் பாட்டிலையே நிரப்பிய மாதிரி நீர்த்துப் போகிறது அவரவர் மிக்சிங்!
அதனால், கோடிக்கணக்கில் கொட்டுவதற்கு முன்பு நாலும் பார்ப்பது நல்லதுதானே!

Friday, 22 March 2013

சித்தார்த் சமந்தா லவ்வுக்கு காரணமான படத்திற்கு தடை!


சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் 'ஜாபர்தஸ்த்' கடந்த மாதம் ஆந்திரா முழுவதும் இப்படம் ரிலீசானது. தற்போது தமிழில் இதை 'டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர்.
இதற்கிடையில் 'ஜாபர்தஸ்த்' படத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த யாஷ்ராஜ் பிலிம் என்றJabardasthபட நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
'பேண்ட் பாஜாபரத்' என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் 'ஜாபர்தஸ்த்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் 'டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு 'ஜாபர்தஸ்த்' படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடகூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் சித்தார்த் சமந்தா ஜோடிக்கிடையே காதல் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டும் டும் டும்முக்கு கோர்ட் தடை விதித்திருப்பது இந்த ஜோடியின் நிஜ டும் டும் டும்முக்கே தடை விதித்தது போல இருக்கிறது. (எத்தனை முறை வேண்டுமானாலும் லவ் வரும். எத்தனை முறை வேண்டுமென்றாலும் கல்யாணமும் வரும். நல்ல பாலிஸி)

மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு!


மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு! ஆமாம்... தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் வலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஒரு காலத்தில் அஜீத்தின் பரமActor Ajithவைரி. (அப்படீன்னா எதிரின்னு அர்த்தங்ணா..) பசையுள்ள நேரத்தில் 'பார்ப்போம் ஒரு கை' என்று அஜீத்திடம் மல்லுக்கு நின்ற ஏ.எம்.ரத்னம் அதன்பின் சரண்டர் ஆனது எப்போது தெரியுமா? இதே அஜீத்தே ரத்னத்திற்கு வலிய வந்து கால்ஷீட் கொடுத்தபோதுதான். 'எல்லாம் சாய்ராம் செயல்' என்று ஆபிஸ் வாசலிலேயே சாய்பாபா கோவிலை கட்டிவிட்டார் ரத்னம். அந்தளவுக்கு கடனிலிருந்து இவரை மீட்டார்கள் கண்ணுக்கு தெரியாத சாய்ராமும், கண்ணுக்கு தெரிந்த அஜீத்தும்.
இதோ- மறுபடியும் அஜீத்தின் மன்னிப்பு படலம் தொடர்கிறது.
தோள் கொடுக்கும் தோழனாக ஒரு காலத்தில் அஜீத்தின் அருகிலேயே இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு இப்போது மீண்டும் நட்பு கரம் நீட்டியிருக்கிறாராம் அஜீத். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று இருவருமே கசப்பு காலங்களை எரேஸ் பண்ணியது இன்டஸ்ட்ரியே மகிழ வேண்டிய சங்கதி.
சக்கரவர்த்தி கஷ்டத்திலிருக்காரு. அவருக்கு நான் உதவணும். அதனால் நம்ம இணைந்து தரப்போற படத்தை அவர் பேனர்ல பண்ணினால் என்ன என்றாராம் முருகதாசிடம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகியிருக்கிறது.
இன்னொரு கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டுங்கண்ணே... சாய்ராம்!

அந்த முத்தம் வேணாம் இந்த முத்தம் வேணும்...


வில்லேஜிலிருந்து நடிக்க வந்தவர் என்றால் கொஞ்சம் மட்டமாக பார்க்கும் வழக்கம் பிரபலKarupampattiஹீரோக்கள் பலருக்கு இருக்கிறது. இந்த அவஸ்தையை பெரும்பாலும் அனுபவிப்பது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கும் புதுமுக நடிகைகள்தான். ஆனால் மும்பை நடிகையான அபர்ணா பாஜ்பாய்க்கும் அப்படி ஒரு வேதனையான விஷயம் நடந்ததுதான் ஆச்சர்யம்.
அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் கருப்பம்பட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர்தான் அபர்ணா. இவருக்கு படத்தில் வில்லேஜ் கேர்ள் வேஷமாம். இதே அஜ்மலுக்கு இன்னொரு ஜோடியும் இருக்கிறார் படத்தில். அவர் வெளிநாட்டு அழகி. கதைப்படி இந்த வில்லேஜ் ஹீரோயினுக்கு லிப் கிஸ் கொடுக்க வேண்டுமாம் அஜ்மல். ஆனால் ஐயய்யோ என்று பின்வாங்கிய அஜ்மல், ஏங்க எனக்கு குடும்பம்னு ஒண்ணு இருக்கு. மனைவிக்கு பதில் சொல்லணும் புரிஞ்சுக்கோங்க என்று கூறிவிட்டு அந்த முத்தக்காட்சியை எடுக்க விடாமலே தடுத்துவிட்டாராம்.
அதற்கப்புறம் வெளிநாட்டு ஹீரோயினோடு இவர் டூயட் பாடுகிற காட்சிகள் சில நாட்களில் எடுக்க வேண்டிய நிலைமை. அப்போது ஸ்பாட்டுக்கு வந்த அஜ்மல், அழகியை பார்த்து கிறங்கிப் போனாராம். சார்... இப்ப வேணும்னா அந்த முத்தக்காட்சியை வைங்க. நான் நடிக்கிறேன் என்று கூற, அதிர்ந்தே போனாராம் டைரக்டர் பிரபுராஜசோழன்.
இந்த விஷயத்தைதான் முதலில் அஜ்மல் வீட்ல போட்டுக் கொடுக்கணும்!

Friday, 5 October 2012

விஷால், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி கோடம்பாக்க கூட்டு பிரசாதம்


வரவர இந்தி ஃபீல்டு மாதிரி ஆகி வருகிறது தமிழ் ஃபீல்டும். ஒரு படத்தில் நாலைந்துJeyam Ravi - Arya - Jeeva - Vishalஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்கிற விஷயத்தில்தான் இந்த வியத்தகு மாற்றம். ஜீவா படத்தில் ஆர்யா நடிப்பதும், சூர்யாவுடன் விக்ரம் நடிப்பதும், விஷாலும் ஆர்யாவும் மாப்ளே மச்சானாகி குழைவதுமாக ஆரோக்கியமாகதான் இருக்கிறது ஃபீல்டு. (முகமூடி ஊத்திக்கிச்சுடோய்... என்று நடுநடுவே கொடுக்கப்படும் பார்ட்டிகள் இந்த கணக்கில் இல்லை)
ரசிகர்களுக்கு தரப்படுகிற இந்த பால் பாயாச பரவசத்தில் மேலும் ஒரு முந்திரியை போட்டிருக்கிறார் சுந்தர்சி. தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் மதகஜராஜாவை தொடர்ந்து நான்கு முக்கிய ஹீரோக்களை ஒன்றிணைத்திருக்கிறார்.
விஷால், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய நால்வரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கப் போகிறார். இதற்கான பேச்சு வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக துவங்கி அதே சுவாரஸ்யத்தோடு முடிந்திருக்கிறது. இந்த அதிமுக்கியமான படத்தில் அச்சுபிச்சு வில்லனாக நடிக்கிறாராம் சந்தானம். பின்னே... அவரு இல்லாமலா?

த்ரிஷாவுக்கு தெரியாமல்... ஒரு அதிர்ச்சி விசிட்


ரெண்டு பூனைகள் தனியே ஒதுங்கி மியாவ்னு கொஞ்சும்போது கண்டும் காணாமல் போறதுதான் நாகரீகம். Trisha - Ranaஆனால் ஆந்திரா பூனை ராணாவும், தமிழ்நாட்டு பூனை த்ரிஷாவும் மியாவ் சொல்லும் போதெல்லாம் காதே டேமேஜ் ஆன மாதிரி கவலைப்படுகிறது கோடம்பாக்கம்.
'ரெண்டு பேர் லவ்வும் புட்டுகிச்சு தெரியுமா?' என்று புரளி கிளப்பவும் தவறுவதில்லை. பல நாட்களாக மனதை பொசுக்கும் இந்த விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் என்று இக்னோர் செய்து வந்த த்ரிஷா, அண்மையில் வெளிவந்த ஒரு கிசுகிசுவுக்கு மட்டும் விசாரணை போட்டாராம்.
வேறொன்றுமில்லை, த்ரிஷாவுக்கே தெரியாமல் சென்னை வந்தாராம் ராணா. அவர் யாரை சந்தித்துவிட்டு போனார் என்பதுதான் த்ரிஷாவின் விசாரணையாக இருந்திருக்கிறது.

டி.ராஜேந்தருடன் சிவகார்த்திகேயன் கோடம்பாக்கத்தில் அதிரடி அலேக்


யேய்ய் டண்டணக்கா... டமுக்குணக்கா என்று குரல் வருகிற திசையெல்லாம்T.Rajendran - Siva Karthikeyanடி.ஆரின் சங்க நாதம்தான் முழங்குறது! அவர் எவ்வளவு சீரியசாக நடித்தாலும், அதை ரசித்து சிரித்து என்ஜாய் பண்ணுகிற கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இதுவரைக்கும் தன் நடிப்பை தானே இயக்கிக் கொண்டிருந்த டி.ஆர் வேறொருவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதே ரசிகர்களுக்கு கடவுள் கொடுத்த பம்பர் பலேக்காதான்!
இதென்ன ஹாட் நியூஸ் என்று கூகுளில் குழி தோண்டுகிற ஆசாமிகளுக்கு இதோ விரிவாக தருகிறோம் அதே நியூசை.
சமீபத்தில் ஒரு புதிய கதையோடு சிவ கார்த்திகேயேனை அணுகினார் ஒரு புது இயக்குனர். கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த சிவ கார்த்திகேயேன் தான் சம்பளமாக கேட்டு வரும் பெரிய பெரிய லட்சங்களை சற்றே குறைத்துக் கொண்டதுடன், கால்ஷீட் தேதிகளையும் கேட்ட நேரத்தில் கொடுக்க முன்வந்தார். அதற்கு பெரிய காரணம் இருந்தது. சிவ கார்த்திகேயனோடு இணைந்து நடிக்கப் போகிறவர் டி.ராஜேந்தர்தான் என்று அந்த புதிய இயக்குனர் சொல்ல, அதற்கு கிடைத்த டிஸ்கவுன்ட்தான் சி.கா வின் இந்த சலுகை.
இந்த கதையில் நடிக்க டி.ஆரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இந்த செய்தியின் ஸ்பெஷல் திருப்பம்.

அஜீத்-சிம்பு இணைகிறார்கள் வரப்போகும் அதிரடி படம்


விட்டால் அஜீத் ரசிகர் மன்றத்தை மறுபடியும் சீரமைத்து அதற்கு அகில இந்தியSimbu - Ajithதலைவராகிவிடுவார் போலிருக்கிறது சிம்பு. வார்த்தைக்கு வார்த்தை அஜீத் புராணம் பாடி வரும் அவர் அடிக்கடி அஜீத்தை சந்தித்து எனர்ஜி ஏற்றிக் கொள்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். தற்போது நாம் சொல்லப்போகும் செய்திதான் ஹாட்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் இந்த படம் முடிந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து இன்டஸ்ட்ரிக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை தரப்போகிறார்கள். அது?
இருவரும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள்! பல நாட்களாக அஜீத்திடம் சிம்பு வைத்துக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனும் இதுதான். எறும்பு வாக்கிங் போனால் கல்லே டேமேஜ் ஆகும்போது அஜீத் எம்மாத்திரம்? 'அதுக்கென்ன... செஞ்சுட்டாப்போச்சு' என்று சொல்லிவிட்டாராம்.
தனது அடுத்த படத்தை இயக்கப் போகும் சிறுத்தை சிவாவின் காதில் இப்போதுதான் இந்த விஷயத்தை போட்டாராம் அஜீத். வெத்தலைய மெல்லலாம்னு நினைச்சா வேப்பிலையை கொடுக்குறாங்களேன்னு ஆடிப்போயிருக்கிறாராம் சிவா.

லாரன்சை வறுக்கும் அனுஷ்கா ஏனிந்த கோபமம்மா?


அமைதி புறாவாக இருந்தாலும், அதை 'புறா 65' ஆக்குவதில் சிறந்த சமையல் கலைஞர்கள் நிறைந்த பீல்டுதான் சினிமா. சமீபத்தில் அப்படி 'புறா 65' ஆனவர் லாரன்ஸ்.
'காஞ்சனா' படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவைதான் அழைத்தார் இவர். உன்anushkaரேஞ்ச் வேற, என் ரேஞ்ச் வேற என்று உதாசீனப்படுத்திய அனுஷ் லாரன்சை புறக்கணிக்க, அப்புறம் நடந்ததுதான் அதிசயம். படம் தாறுமாறான ஹிட்.
பிறகு தெலுங்கில் 'ரிபல்' என்ற படத்திற்காக கதை கேட்க அழைத்த லாரன்சுக்கு உடனே ரெஸ்பான்ஸ் காட்டினார் அனுஷ். ஆனால் அப்படத்தில் தொடர முடியாதளவுக்கு அனுஷ்காவை டார்ச்சர் செய்துவிட்டாராம் லாரன்ஸ். பிறகு இந்த கேரக்டரில் தமன்னா நடித்தார்.
அதுபோகட்டும்... நெட் ரிசல்ட் என்ன? ஆந்திராவில் ரிலீஸ் ஆன ரிபல், தாறுமாறான பிளாப்! நல்ல தூக்கலா பெப்பர் போட்டு லாரன்சை வறுத்துக் கொண்டிருக்கிறதாம் அனுஷ்கா ஏரியா!

துப்பாக்கியில் விஜய் யார்? -கதை இதோ...


'துப்பாக்கி' படத்தின் கதை என்னவாக இருக்கும், அதில் விஜய் எந்த கேரக்டரில் நடிக்கிறார்? இதுதான் விஜய் ரசிகர்களையும் கோடம்பாக்கத்தையும் சுற்றி சுற்றி வரும் கேள்வி. vijay thuppaki lastest still(டைட்டில் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் சப்டைட்டிலோடு சேர்த்து இப்படி பேர் வைக்கலாமே என்று ட்விட்டரில் எரிச்சல் கிளப்புகிறார்கள் சிலர். 'துப்பாக்கி -வழக்கு நிலுவையில்' என்று பெயர் வைக்க சொல்லும் அவர்களை விஜய் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்களாக!)
விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்று கூறி இப்போதைக்கு ரசிகர்களின் யூகத்திற்கு ஒரு பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் முருகதாஸ். துப்பாக்கி கதையில் விஜய் யார்? தேடி திரிந்து விசாரித்ததில் நமக்கு கிடைத்த தகவல் இதுதான்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததல்லவா? அந்த நேரத்தில் தப்பிய தீவிரவாதிகள் சிலர் நாட்டுக்குள் ஊடுருவி விட்டார்களாம். இதையறிந்த ஒரு போலீஸ் அதிகாரி தனியாக யார் துணையும் இல்லாமல் அவர்களை கண்டுபிடித்து போட்டுத் தள்ளினாராம். இந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டுதான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யை போலீஸ் அதிகாரியாக காட்டாமல் மிலிட்டரி ஆபிசராக காட்டுகிறாராம் முருகதாஸ்.
முழுக்க முழுக்க மும்பையிலேயே படமாக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியில் காஜல் அகர்வால் விஜய்யை கண்டு இம்ப்ரஸ் ஆக மாட்டாராம். அவரை விஜய் ஒரு தலையாக காதலிப்பதாக போகிறதாம் காட்சிகள்.
அவ்ளோ பெரிய அப்பா டக்கராம்மா நீ

சூர்யாவை சீண்டியது ஏன்? கே.வி.ஆனந்தும் தைரியமும்!


பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு டிசம்பர் கச்சேரிதான் நடத்துவார்கள் பலK.V.Anandஇயக்குனர்கள். அதுவும் தொழில் முறை ஜால்ரா கலைஞர்களை கூட தோற்கடித்துவிடும் இவர்களது பேச்சு. ஆனால் சமீபத்தில் 'மாற்றான்' பிரஸ்மீட்டில் பேசிய கே.வி.ஆனந்த், சூர்யாவை வைத்துக் கொண்டே ஹீரோக்களின் தலையில் ஒரு நச் குட்டு குட்டியது இன்டஸ்ட்ரியை குழம்ப வைத்திருந்தது. ஏன் இந்தாளு இப்படி பேசினாரு, அவ்ளோ டார்ச்சர் கொடுத்திருப்பாரோ சூர்யா? என்றெல்லாம் ஆளாளுக்கு யூகங்களை கிளப்ப, கடைசியாக உண்மை வந்தாச்சு...!
கடந்த ஆடிப்பெருக்கு அன்று ரஜினி படத்தை இயக்குவதற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம் கே.வி.ஆனந்த். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, துணைக்கு ஈராஸ் நிறுவனமும் கை கோர்க்கிறதாம் இந்த பிராஜக்டில்.
தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நடிகரையே மயக்கியாச்சு. இனி சூர்யாவாவது, ஆர்யாவாவது? அதனால்தான் சூர்யாவை கீறுகிற மாதிரி பேசிவிட்டார் ஆனந்த்.
பரமசிவன் கழுத்திலிருந்து ஸ்நேக் சீறுச்சு... கருடா சவுக்கியமா?

நமீதா வேண்டாம்ங்க... நடிகர் ஆர்.கே அச்சம்


நடிகர் ஆர்.கே இப்போ ரியல் எஸ்டேட்டுக்கு வந்துட்டாரு. யாருக்கும் அடங்காதR Kஜல்லிக்கட்டு காளைதான் சினிமா. கொஞ்சம் அசந்தா போதும், தாவங்கட்டையே பேத்து டிஞ்சர் போட வைக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் கூட இருக்கலாம் இந்த தொழில் மாற்றம்.
எங்கு எதை செய்தாலும் அதில் இருக்கிற நுணுக்க விளக்கங்களை புரிந்தவர் ஆயிற்றே? இந்த முறை அவர் செய்யப் போகும் விஷயம் நிஜமாகவே சூப்பர். வாழ்க்கையில புண்ணியத்தை சேர்க்குறியோ இல்லையோ? அரை கிரவுண்டு நிலத்தை சேர்த்து வச்சா சந்ததிகள் போற்றும் என்பதுதான் இவரது லேட்டஸ்ட் பொன்மொழி. அப்படி சேர்க்கும் அந்த அரை கிரவுண்ட் நிலத்தை பாதுகாப்பதுதான் சினிமா எடுப்பதை விட சிக்கலான விஷயம்.
இப்படி ஒரு நிலத்தை யார் வைத்திருந்தாலும் வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய்R Kஇவரிடம் கட்டிவிட்டால் அந்த இடத்தை ஒரு வருடத்திற்கு பாதுகாத்து தருவாராம் ஆர்.கே. இப்படி வருஷா வருஷம் கட்டினால் கட்டுகிற வரைக்கும் நிலம் இவர் பார்வையில் இருக்குமாம். இதற்காக தமிழகம் முழுக்க சுமார் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிற திட்டத்தை வைத்திருக்கிறார் (கேட்க நல்லாயிருக்கு. செயல்படுத்தணுமே?)
இத்துடன் லக்சுரி பிளாட்ஸ் கட்டுகிற திட்டத்தையும் வைத்திருக்கிறார். நல்லவேளை, இந்த புது பிளாட் அறிவிப்புக்கு எந்த நடிகர் நடிகைகளையும் அழைத்து வரவில்லை அவர். 'கடந்த முறை ஒரு நிகழ்ச்சிக்கு நமீதாவை அழைச்சுட்டு வந்தேன். நானும் அவரும் சேர்ந்து பிசினஸ் பண்றதா எழுதிட்டாங்க. அதனால் இனிமேல் ஸோலோ பர்பாமென்ஸ்தான்' என்றார் ஆர்.கே.

Friday, 14 September 2012

அவர் ஒரு பார்பி பொம்மை... தமன்னாவை புகழும் ஹீரோ


'தமன்னா, நீயெல்லாம் ஒரு வுமனா?' என்று அவரை அலட்சியப்படுத்திய சிலருக்கு இந்த செய்தி Tamannaவேப்பங்காய் ஜூஸ்தான். சில கட்டாயங்களால் தமிழ் சினிமாவை விட்டே துறவறம் பூண்டு விட்டார் தமன். சமீபத்தில் கூட அவரை அப்ரோச் செய்த ஒரு இயக்குனருக்கு எஸ்.டி.டி போன் பில் தண்டமானதுதான் மிச்சம்.
கூகுள் மேப்பில் கூட தமிழ்நாட்டை சர்ச் செய்ய விரும்பாத தமன்னா அப்படியே பிளைட் ஏறி மும்பைக்கும் ஆந்திராவுக்குமாக டிராவல் செய்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் இவரைப்பற்றி பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, தமன்னாவின் உள் மனசை உய்யலாலாவாக்கியிருக்கிறது.
ஹிம்மத்வாலா என்ற படத்திற்காக தற்போது மும்பையில் தங்கியிருக்கும் தமன்னாவை பற்றி பேசிய ஹிருத்திக் 'அவர் பார்பி பொம்மை மாதிரி பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார்' என்று கூறியிருக்கிறார் அப்பேட்டியில்.
அந்த பேட்டியை ஸ்கேன் செய்து இங்கிருக்கும் சிலருக்கு மெயிலில் அனுப்பினாராம் தமன். அடுப்புல புரட்டி எடுக்கலேன்னா அல்வா உருவாகுமா? இந்த தகுதியை அடைய தமன்னா அடைந்த சங்கடங்கள் எத்தனையோ? ம்ஹம்ம்ம்...

Tuesday, 21 August 2012

நடிகைகளின் கவர்ச்சிபடங்கள்















வந்தாளே மகராசி பிந்துமாதவி


தமிழ்சினிமாவின் 'வந்தாளே மகராசி' ஆவது அவ்வளவு சுலபம் அல்ல. நாலுBindhu Madhaviபடங்கள் குப்புற விழுந்தாலும் மார்க்கெட்ல இடம் பிடிக்கிற வித்தை சில நடிகைகளுக்கு மட்டுமே சாத்தியம். முதல் படம் ஹிட்டானாலும் 'முடிஞ்சா துரத்திக்க' என்று ஃபீல்டை விட்டே ஓடுகிற நடிகைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் ரெண்டும் கெட்டான் வெற்றிகளை வைத்துக் கொண்டே அடுத்த ஸ்டெப்பில் ஏறிவரும் நடிகைகளில் பிந்து மாதவிக்கு இணை அவரேதான்.
கேடி பில்லா, கில்லாடி ரங்கா படத்தை இயக்கிவரும் பசங்க பாண்டிராஜ், அப்படத்தில் நடிக்க கும்கி ஹீரோயின் பார்வதி மேனனை அழைத்ததும், அவர் மறுத்ததும் இன்டஸ்ட்ரி அறிந்த இன்சல்ட் ஸ்டோரி. கிடா பெருத்தா கயிறுக்கு அடங்காது. நமக்கெதுக்கு அது பின்னால ஓட்டம் என்று முடிவெடுத்த பாண்டிராஜ் வேறு நடிகையை தேடலாம் என்று முடிவெடுத்தார். தகவலை காற்று வாக்கில் கேள்வியுற்ற பிந்து மாதவி, நேரடியாகவே பாண்டிராஜை தொடர்பு கொண்டாராம்.
சம்பள விஷயத்திலிருந்து சகல விஷயங்களிலும் டவுண் டூ எர்த் ஆக இருந்த பிந்துவை தனது படத்தின் ஹீரோயினாக்கி விட்டார் பாண்டி. வேண்டி விரும்பியிருக்கிறார் பிந்து. தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவிக்க ஆசிர்வதிங்கப்பா...

Thursday, 16 August 2012

சந்தானத்துடன் பவர்ஸ்டார்

சந்தன நடிகர் தயாரித்து, நடிக்கும் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் பவர் ஸ்டார்.  ஏற்கெனவே தயாரிப்பாளருடன் நடித்த கண்ணாடி படத்தில் குத்தாட்டம் போட்ட சந்தன நடிகர், அது பிடித்துப் போகவே, தற்போது நடிக்கும் படத்திலும் இசையமைப்பாளரிடம் சொல்லி குத்துப் பாட்டு ஒன்றை போடச் சொல்லியிருக்கிறாராம். இந்த குத்துப் பாட்டுக்கு இவருடன் சேர்ந்து ஆடப்போவது பவர் ஸ்டார் என்பதுதான் ஹைலைட்.

கலகலப்பான நடிகை கேட்டார் சம்பளம்


கலகலப்பான நடிகையை தனது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு பட அதிபர் சென்றார். களவாணி நாயகனை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும்  கலகலப்பான  நடிகையிடம் கேட்டார் அந்த அதிபர். 

ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்றார் நடிகை. இது ரொம்ப அதிகமாச்சே? என்று தயாரிப்பாளர் பேரம் பேச இந்தி நடிகைகளுக்கு கோடி ரூபாய் கொடுப்பீங்க. நாங்க கேட்டால் பேரம் பேசுவீங்க. அப்படித்தானே? என்று நியாயம் கேட்க ஆரம்பித்தார். 

கலகலப்பான நடிகை கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று அவர் உறுதியாக சொன்னதை தொடர்ந்து இடத்தை காலி செய்தார் பட அதிபர்!