Tuesday, 21 August 2012
வந்தாளே மகராசி பிந்துமாதவி
தமிழ்சினிமாவின் 'வந்தாளே மகராசி' ஆவது அவ்வளவு சுலபம் அல்ல. நாலு
படங்கள் குப்புற விழுந்தாலும் மார்க்கெட்ல இடம் பிடிக்கிற வித்தை சில நடிகைகளுக்கு மட்டுமே சாத்தியம். முதல் படம் ஹிட்டானாலும் 'முடிஞ்சா துரத்திக்க' என்று ஃபீல்டை விட்டே ஓடுகிற நடிகைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் ரெண்டும் கெட்டான் வெற்றிகளை வைத்துக் கொண்டே அடுத்த ஸ்டெப்பில் ஏறிவரும் நடிகைகளில் பிந்து மாதவிக்கு இணை அவரேதான்.
கேடி பில்லா, கில்லாடி ரங்கா படத்தை இயக்கிவரும் பசங்க பாண்டிராஜ், அப்படத்தில் நடிக்க கும்கி ஹீரோயின் பார்வதி மேனனை அழைத்ததும், அவர் மறுத்ததும் இன்டஸ்ட்ரி அறிந்த இன்சல்ட் ஸ்டோரி. கிடா பெருத்தா கயிறுக்கு அடங்காது. நமக்கெதுக்கு அது பின்னால ஓட்டம் என்று முடிவெடுத்த பாண்டிராஜ் வேறு நடிகையை தேடலாம் என்று முடிவெடுத்தார். தகவலை காற்று வாக்கில் கேள்வியுற்ற பிந்து மாதவி, நேரடியாகவே பாண்டிராஜை தொடர்பு கொண்டாராம்.
சம்பள விஷயத்திலிருந்து சகல விஷயங்களிலும் டவுண் டூ எர்த் ஆக இருந்த பிந்துவை தனது படத்தின் ஹீரோயினாக்கி விட்டார் பாண்டி. வேண்டி விரும்பியிருக்கிறார் பிந்து. தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவிக்க ஆசிர்வதிங்கப்பா...
Thursday, 16 August 2012
சந்தானத்துடன் பவர்ஸ்டார்
சந்தன நடிகர் தயாரித்து, நடிக்கும் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் பவர் ஸ்டார். ஏற்கெனவே தயாரிப்பாளருடன் நடித்த கண்ணாடி படத்தில் குத்தாட்டம் போட்ட சந்தன நடிகர், அது பிடித்துப் போகவே, தற்போது நடிக்கும் படத்திலும் இசையமைப்பாளரிடம் சொல்லி குத்துப் பாட்டு ஒன்றை போடச் சொல்லியிருக்கிறாராம். இந்த குத்துப் பாட்டுக்கு இவருடன் சேர்ந்து ஆடப்போவது பவர் ஸ்டார் என்பதுதான் ஹைலைட்.
கலகலப்பான நடிகை கேட்டார் சம்பளம்
கலகலப்பான நடிகையை தனது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு பட அதிபர் சென்றார். களவாணி நாயகனை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும்
கலகலப்பான நடிகையிடம் கேட்டார் அந்த அதிபர். ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்றார் நடிகை. இது ரொம்ப அதிகமாச்சே? என்று தயாரிப்பாளர் பேரம் பேச இந்தி நடிகைகளுக்கு கோடி ரூபாய் கொடுப்பீங்க. நாங்க கேட்டால் பேரம் பேசுவீங்க. அப்படித்தானே? என்று நியாயம் கேட்க ஆரம்பித்தார்.
கலகலப்பான நடிகை கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று அவர் உறுதியாக சொன்னதை தொடர்ந்து இடத்தை காலி செய்தார் பட அதிபர்!
ஆன்ட்ரியா இச் இச் நச்!
நயன்தாராவின் உதட்டை சிம்பு பட்டா போட்ட படம் வெளிவந்து நாலு வருஷம்
இருக்குமா? அதே ஸ்டைலில் ஒரு ஆக்ரமிப்பு நடந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அத்துமீறி நுழைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். அனாமத்தாக கிடந்தவர் ஆன்ட்ரியா.
சுமார் எட்டாயிரம் ரிக்டரில் பூகம்பம் வந்த மாதிரி கோடம்பாக்கமே துடித்துப் போனது நேற்றுதான். ஆன்ட்ரியாவும் அனிருத்தும் நெருங்கி நின்று லிப் கிஸ் அடிக்கிற அந்த காட்சியை யாரோ ஒரு புண்ணியவான் ட்விட்டரில் வெளியிட, படப்பிடிப்புக்கு நடு நடுவே கேரவேனில் புகுந்து கொண்டு அதே படத்தை திரும்ப திரும்ப டவுன் லோடு செய்து சூடேற்றிக் கொண்டார்கள் சில ஹீரோக்கள்.
ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் இன்னும் ஜாஸ்தி. பல்லி மாதிரி இருந்துகிட்டு
ஆன்ட்ரியாவை மடக்கிட்டாரே என்று பெருமூச்செரிந்தார்கள் அவர்கள். இப்படி ஊர் உலகத்தையே சேதுவாக்கிவிட்டு சிவனே என்று இருந்தது இந்த ஜோடி.
அடிப்படையில் பணக்காரரான அனிருத்துக்கு கோடம்பாக்கத்து கொய்யாப் பழங்கள் ஈசியாக கிடைக்கும் என்றாலும், இது காதலா, இல்லை வெறும் டைம் பாஸிங்கா என்றுதான் மண்டைக்குள் யாகம் நடத்திக் கொண்டிருந்தார்கள் விவரம் புரிந்த நிருபர்கள். யார் செல்லுக்கும் சிக்காமல் ஓடிவிட்டது ஜோடி.
எப்படியோ கை வளையலை எடுத்து மோதிரமா போட்டுகிட்ட மாதிரி பொருந்தா காதலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரை எல்லாம் வல்ல இறைவன்தான் காப்பாற்றணும்.
உலகத்தையே சுற்றணும்.. சினேகா
அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சினேகா. கூடவே பிரசன்னாவும் வந்திருந்தார். பூவுக்கே சென்ட் அடிச்ச மாதிரி சேர்ந்தே
திரியும் ஜோடிகள் ஆகிவிட்டார்கள் இருவரும். (உங்க ஹனிமூன் இப்படி உள்ளுர் கச்சேரியாவே முடிஞ்சுட்டுதே ஜோடிகளே...)
மைக்கை முதலில் சினேகாவிடம் நீட்டியது விழாக்குழு. அவருதான் ஸ்பெஷல், அவருகிட்ட கொடுங்க என்று பிரசன்னா பக்கம் கை நீட்டினார் சினேகா. வேறு வழியில்லாமல் பிரசன்னாவின் பேச்சை முதலில் கேட்டது கூட்டம். அப்புறமாக மைக்கை பிடித்தார் சினேகா.
எனக்கு உலகத்தையே சுற்றி வரணும்னு ஆசை இருக்கு. என்னோட கல்யாணப் பரிசா பிரசன்னாவிடம் அதைதான் கேட்டிருக்கேன் என்றார். சம்பந்தா சம்மதமில்லாமல் அவர் இப்படி பேசவில்லை. பதிமூணாயிரம் ரூபாய் செலவில் சீனாவுக்கு சுற்றுலா அழைத்துப் போகிற திட்டத்தை அறிமுகப்படுத்துகிற நிறுவனம் ஒன்றின் விழா அது. அதற்காகதான் இப்படி பேசினார் சினேகா.
இவர்கள் இருவரும் வந்து போன செலவுக்காக போட்ட பில் போதுமே உலகத்தை சுற்ற... என்று முணுமுணுத்தது விழா குழு. துட்டு இல்லாத பங்ஷன் ஹிட்டு இல்லாத சினிமா மாதிரின்னு புதிய கொள்கை வகுத்துட்டு திரியுது ஜோடி. நல்ல பாலிஸிதான்!
Friday, 3 August 2012
அமலாபால் கவர்ச்சி
அமலாபால் ஏற்கெனவே சிந்து சமவெளி படத்தில்
மாமனாருடன் கள்ளத் தெதாடர்பு வைத்துள்ள மருமகளாக நடித்தவர் பின்பு மைனா படத்தில்
குடும்ப பாங்காகவும், தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுடன், வேட்டை படத்தில்
ஆர்யாவுடனும், காதலில் செசாதப்புவது எப்படி? படத்தில் சித்தார்த்துடன்
ஜேஜாடியாகவும் நடித்தார். தற்பேபாது மலையாளத்தில் நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க
மறுத்துவிட்டார்.
தற்பேபாது சக நடிகைகளின் பேபாட்டி
சமாளிப்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தயார் என்று பேட்டி அளித்துள்ளார்.
கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. சினிமாவில்
கவர்ச்சி தேவை என்பதால் நீச்சல் உடையில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள்.
நடிக்கவும் தயார். கதைக்கு தேவை என்றால் நீச்சல் உடையில் நடிக்கவும் தயார்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.
அமலா மீண்டும் நடிப்பு
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அமலா, ரஜினி, கமல் ஜேஜாடியாக பல படங்களில் நடித்தவர். 1992ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கெகாண்டு சினிமாவுக்கு முழுக்கு பேபாட்டார். 20 வருடம் இடைவெளிக்கு பிறகு லைப் இஸ் பியூட்டிபுல் என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். நடிப்பதை பற்றி அமலா செசால்கிறார். எனது மகன் அகிலை வளர்ப்பதிலும், சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன் என்பதால் நடிக்கவில்லை. தெதாடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்
Wednesday, 1 August 2012
அனுஷ்காவினால் அலெக்ஸ் பாண்டியன் வருவாரா
கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 10 அல்லது 15-ந் தேதிகளுக்குள் முடித்து விட்டு, அக்டோபர் 12-ந் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.
ஆகையால், இப்போதைக்கு அனுஷ்கா இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டு, பிறகு அவரது காட்சிகளை எடுக்கலாம் என ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்புக்குழு முடிவு செய்துள்ளதாம்.
விக்ரமுடன் லட்சுமிராய்
யூ டிவி நிறுவனம் தயாரிக்கும் ‘தாண்டவம்’ படத்தை விஜய் இயக்குகிறார். தெய்வத் திருமகள் படத்திற்கு பிறகு விஜய்யும், விக்ரமும் இணையும் படம். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அனுஷ்காவும், ‘மதராச பட்டினம்’ படத்தில் நடித்த எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு மேலும் ஒரு நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அடுத்த வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக லட்சுமிராய் 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லட்சுமி ராய் கூறும்போது, கடந்த வருடத்தில் நான் நடித்து வெளியான மங்காத்தா’, ‘காஞ்சனா’ படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது. அதேபோல், இப்படத்திலும் எனது கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.
இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை ஜுலையிலும், படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் சந்தானம், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், சாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ், டெல்லி கணேஷ் ஆகிய நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)

















