அமைதி புறாவாக இருந்தாலும், அதை 'புறா 65' ஆக்குவதில் சிறந்த சமையல் கலைஞர்கள் நிறைந்த பீல்டுதான் சினிமா. சமீபத்தில் அப்படி 'புறா 65' ஆனவர் லாரன்ஸ்.
'காஞ்சனா' படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவைதான் அழைத்தார் இவர். உன்
ரேஞ்ச் வேற, என் ரேஞ்ச் வேற என்று உதாசீனப்படுத்திய அனுஷ் லாரன்சை புறக்கணிக்க, அப்புறம் நடந்ததுதான் அதிசயம். படம் தாறுமாறான ஹிட்.
பிறகு தெலுங்கில் 'ரிபல்' என்ற படத்திற்காக கதை கேட்க அழைத்த லாரன்சுக்கு உடனே ரெஸ்பான்ஸ் காட்டினார் அனுஷ். ஆனால் அப்படத்தில் தொடர முடியாதளவுக்கு அனுஷ்காவை டார்ச்சர் செய்துவிட்டாராம் லாரன்ஸ். பிறகு இந்த கேரக்டரில் தமன்னா நடித்தார்.
அதுபோகட்டும்... நெட் ரிசல்ட் என்ன? ஆந்திராவில் ரிலீஸ் ஆன ரிபல், தாறுமாறான பிளாப்! நல்ல தூக்கலா பெப்பர் போட்டு லாரன்சை வறுத்துக் கொண்டிருக்கிறதாம் அனுஷ்கா ஏரியா!
No comments:
Post a Comment