நடிகர் ஆர்.கே இப்போ ரியல் எஸ்டேட்டுக்கு வந்துட்டாரு. யாருக்கும் அடங்காத
ஜல்லிக்கட்டு காளைதான் சினிமா. கொஞ்சம் அசந்தா போதும், தாவங்கட்டையே பேத்து டிஞ்சர் போட வைக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் கூட இருக்கலாம் இந்த தொழில் மாற்றம்.
எங்கு எதை செய்தாலும் அதில் இருக்கிற நுணுக்க விளக்கங்களை புரிந்தவர் ஆயிற்றே? இந்த முறை அவர் செய்யப் போகும் விஷயம் நிஜமாகவே சூப்பர். வாழ்க்கையில புண்ணியத்தை சேர்க்குறியோ இல்லையோ? அரை கிரவுண்டு நிலத்தை சேர்த்து வச்சா சந்ததிகள் போற்றும் என்பதுதான் இவரது லேட்டஸ்ட் பொன்மொழி. அப்படி சேர்க்கும் அந்த அரை கிரவுண்ட் நிலத்தை பாதுகாப்பதுதான் சினிமா எடுப்பதை விட சிக்கலான விஷயம்.
இப்படி ஒரு நிலத்தை யார் வைத்திருந்தாலும் வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய்
இவரிடம் கட்டிவிட்டால் அந்த இடத்தை ஒரு வருடத்திற்கு பாதுகாத்து தருவாராம் ஆர்.கே. இப்படி வருஷா வருஷம் கட்டினால் கட்டுகிற வரைக்கும் நிலம் இவர் பார்வையில் இருக்குமாம். இதற்காக தமிழகம் முழுக்க சுமார் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிற திட்டத்தை வைத்திருக்கிறார் (கேட்க நல்லாயிருக்கு. செயல்படுத்தணுமே?)
இத்துடன் லக்சுரி பிளாட்ஸ் கட்டுகிற திட்டத்தையும் வைத்திருக்கிறார். நல்லவேளை, இந்த புது பிளாட் அறிவிப்புக்கு எந்த நடிகர் நடிகைகளையும் அழைத்து வரவில்லை அவர். 'கடந்த முறை ஒரு நிகழ்ச்சிக்கு நமீதாவை அழைச்சுட்டு வந்தேன். நானும் அவரும் சேர்ந்து பிசினஸ் பண்றதா எழுதிட்டாங்க. அதனால் இனிமேல் ஸோலோ பர்பாமென்ஸ்தான்' என்றார் ஆர்.கே.
No comments:
Post a Comment