தமிழ்சினிமாவின் 'வந்தாளே மகராசி' ஆவது அவ்வளவு சுலபம் அல்ல. நாலு
படங்கள் குப்புற விழுந்தாலும் மார்க்கெட்ல இடம் பிடிக்கிற வித்தை சில நடிகைகளுக்கு மட்டுமே சாத்தியம். முதல் படம் ஹிட்டானாலும் 'முடிஞ்சா துரத்திக்க' என்று ஃபீல்டை விட்டே ஓடுகிற நடிகைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் ரெண்டும் கெட்டான் வெற்றிகளை வைத்துக் கொண்டே அடுத்த ஸ்டெப்பில் ஏறிவரும் நடிகைகளில் பிந்து மாதவிக்கு இணை அவரேதான்.
கேடி பில்லா, கில்லாடி ரங்கா படத்தை இயக்கிவரும் பசங்க பாண்டிராஜ், அப்படத்தில் நடிக்க கும்கி ஹீரோயின் பார்வதி மேனனை அழைத்ததும், அவர் மறுத்ததும் இன்டஸ்ட்ரி அறிந்த இன்சல்ட் ஸ்டோரி. கிடா பெருத்தா கயிறுக்கு அடங்காது. நமக்கெதுக்கு அது பின்னால ஓட்டம் என்று முடிவெடுத்த பாண்டிராஜ் வேறு நடிகையை தேடலாம் என்று முடிவெடுத்தார். தகவலை காற்று வாக்கில் கேள்வியுற்ற பிந்து மாதவி, நேரடியாகவே பாண்டிராஜை தொடர்பு கொண்டாராம்.
சம்பள விஷயத்திலிருந்து சகல விஷயங்களிலும் டவுண் டூ எர்த் ஆக இருந்த பிந்துவை தனது படத்தின் ஹீரோயினாக்கி விட்டார் பாண்டி. வேண்டி விரும்பியிருக்கிறார் பிந்து. தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவிக்க ஆசிர்வதிங்கப்பா...
No comments:
Post a Comment