Thursday, 16 August 2012

ஆன்ட்ரியா இச் இச் நச்!


நயன்தாராவின் உதட்டை சிம்பு பட்டா போட்ட படம் வெளிவந்து நாலு வருஷம்Andrea kis Anirudhஇருக்குமா? அதே ஸ்டைலில் ஒரு ஆக்ரமிப்பு நடந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அத்துமீறி நுழைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். அனாமத்தாக கிடந்தவர் ஆன்ட்ரியா.
சுமார் எட்டாயிரம் ரிக்டரில் பூகம்பம் வந்த மாதிரி கோடம்பாக்கமே துடித்துப் போனது நேற்றுதான். ஆன்ட்ரியாவும் அனிருத்தும் நெருங்கி நின்று லிப் கிஸ் அடிக்கிற அந்த காட்சியை யாரோ ஒரு புண்ணியவான் ட்விட்டரில் வெளியிட, படப்பிடிப்புக்கு நடு நடுவே கேரவேனில் புகுந்து கொண்டு அதே படத்தை திரும்ப திரும்ப டவுன் லோடு செய்து சூடேற்றிக் கொண்டார்கள் சில ஹீரோக்கள்.
ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் இன்னும் ஜாஸ்தி. பல்லி மாதிரி இருந்துகிட்டுAndrea kis Anirudhஆன்ட்ரியாவை மடக்கிட்டாரே என்று பெருமூச்செரிந்தார்கள் அவர்கள். இப்படி ஊர் உலகத்தையே சேதுவாக்கிவிட்டு சிவனே என்று இருந்தது இந்த ஜோடி.
அடிப்படையில் பணக்காரரான அனிருத்துக்கு கோடம்பாக்கத்து கொய்யாப் பழங்கள் ஈசியாக கிடைக்கும் என்றாலும், இது காதலா, இல்லை வெறும் டைம் பாஸிங்கா என்றுதான் மண்டைக்குள் யாகம் நடத்திக் கொண்டிருந்தார்கள் விவரம் புரிந்த நிருபர்கள். யார் செல்லுக்கும் சிக்காமல் ஓடிவிட்டது ஜோடி.
எப்படியோ கை வளையலை எடுத்து மோதிரமா போட்டுகிட்ட மாதிரி பொருந்தா காதலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரை எல்லாம் வல்ல இறைவன்தான் காப்பாற்றணும்.

No comments:

Post a Comment