Thursday, 16 August 2012

உலகத்தையே சுற்றணும்.. சினேகா


அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சினேகா. கூடவே பிரசன்னாவும் வந்திருந்தார். பூவுக்கே சென்ட் அடிச்ச மாதிரி சேர்ந்தே Snehaதிரியும் ஜோடிகள் ஆகிவிட்டார்கள் இருவரும். (உங்க ஹனிமூன் இப்படி உள்ளுர் கச்சேரியாவே முடிஞ்சுட்டுதே ஜோடிகளே...)
மைக்கை முதலில் சினேகாவிடம் நீட்டியது விழாக்குழு. அவருதான் ஸ்பெஷல், அவருகிட்ட கொடுங்க என்று பிரசன்னா பக்கம் கை நீட்டினார் சினேகா. வேறு வழியில்லாமல் பிரசன்னாவின் பேச்சை முதலில் கேட்டது கூட்டம். அப்புறமாக மைக்கை பிடித்தார் சினேகா.
எனக்கு உலகத்தையே சுற்றி வரணும்னு ஆசை இருக்கு. என்னோட கல்யாணப் பரிசா பிரசன்னாவிடம் அதைதான் கேட்டிருக்கேன் என்றார். சம்பந்தா சம்மதமில்லாமல் அவர் இப்படி பேசவில்லை. பதிமூணாயிரம் ரூபாய் செலவில் சீனாவுக்கு சுற்றுலா அழைத்துப் போகிற திட்டத்தை அறிமுகப்படுத்துகிற நிறுவனம் ஒன்றின் விழா அது. அதற்காகதான் இப்படி பேசினார் சினேகா.
இவர்கள் இருவரும் வந்து போன செலவுக்காக போட்ட பில் போதுமே உலகத்தை சுற்ற... என்று முணுமுணுத்தது விழா குழு. துட்டு இல்லாத பங்ஷன் ஹிட்டு இல்லாத சினிமா மாதிரின்னு புதிய கொள்கை வகுத்துட்டு திரியுது ஜோடி. நல்ல பாலிஸிதான்!

No comments:

Post a Comment