Tuesday, 3 January 2012

கவர்ச்சி நடிகை திறப்பு கணவரே ஊக்குவிப்பு


கல்யாணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பீங்களா? என்ற கேள்வியை தொடுக்காமல்Swetha Menonஎந்த நடிகையையும் தாலிக்கட்டிக் கொள்ள விடுவதில்லை நிருபர்கள். அதிலும் சிலர், அவரு அனுமதிச்சா... என்று நுனிப்பல்லை கடித்துக் கொண்டே நாணப்படுவதை பார்க்க வேண்டுமே? அந்த சன் லைட்டை கருத்துவிடும்.
கேரள, கர்நாடக, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிப் படங்களின் திம்சு கட்டை ஸ்வேதா மேனனின் கல்யாண அறிவிப்பில் நிருபர்கள் இப்படியும் கேட்டிருக்கலாம். 'கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியா நடிப்பீங்களா?'
இதற்கு அவர் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் தான் சொல்ல வேண்டிய பதிலை செய்தே காட்டியிருக்கிறார். ஸ்ரீவத்சன் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா, வசந்த பாலன் இயக்கிக் கொண்டிருக்கும் அரவான் படத்தில் விலைமாதுவாக நடித்து வருகிறார். பூசாரி வேஷம் போட்டுக் கொண்டு பூணூல் போட மாட்டேன் என்றால் விடுவார்களா?
அரையிருட்டு, முக்கா இருட்டு என்று ராத்திரி நேரத்து தந்தூரியாக்கிவிட்டார்களாம் ஸ்வேதாவை. வேடிக்கை என்னவென்றால் மிஸ்டர் ஸ்ரீவத்சனும் இந்த காட்சிகளை எடுக்கும்போது அருகிலிருந்து ஆதரவு கொடுத்ததுதான். 'என் கணவர் என்னை ரொம்பவே புரிஞ்சு வைச்சிருக்காரு. கவர்ச்சி காட்சியில் எனக்கு என்ன வேணும் (வேணும்னா, வேணாம்னா...?) என்பதை கூட அருகிலிருந்து கவனிக்கிறார்னா பாருங்களேன்' என்றார் ஸ்வேதா.
பொண்டாட்டி பூரிக்கட்டையா இருந்தா, புருஷன் என்பவன் சப்பாத்திதான்.

Wednesday, 21 December 2011

நண்பன் இசைவெளியீடு் கோவையில் ஏன்?


பாடல் வெளியீட்டு விழாக்களை கோடம்பாக்கத்தின் எல்லையை விட்டு வெளியேharris_jayarajநடத்துவதில் அலாதி ஆனந்தம் கொள்கிறார்கள் சினிமாக்காரர்கள். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் என்று எங்கெங்கோ போய் இந்த ஆடியோ விழாக்களை நடத்தும் சினிமாக்காரர்கள் மத்தியில், நாலு ஸ்டெப் தள்ளி விழாவை நடத்தப் போகிறார் ஷங்கர். இவரது நண்பன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயமுத்துரில் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவை ஏன் கோவையில் வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது கடைசியில்...
எதிர்வரும் 23 ந் தேதி கோவை எச்ஐடி காலேஜ் வளாகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் படத்தின் ஹீரோயினான இலியானாவும் கலந்து கொள்ளப் போகிறாராம். இப்பவே அரங்கத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று விற்க ஆரம்பித்து விட்டார்களாம் சிலர்.
இப்படி ஒரு விழாவை நடத்த முடிவு செய்தவுடன், அதை என்னோட மியூசிக் கான்செர்டுக்கு நடுவில் வச்சா என் நிகழ்ச்சிக்கும் கூட்டம் வருமே என்றாராம் ஹாரிஸ் ஜெயராஜ். உலகம் முழுக்க சுற்றி இப்படி ஒரு இசை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்திருந்தார் ஹாரிஸ். ஆனால் முதல் நிகழ்ச்சியே படு பெயிலியர். இதனால் அதிருப்தியுற்ற அவர், வெளிநாட்டில் நடைபெறவிருந்த அத்தனை நிகழ்ச்சியையும் கேன்சல் செய்துவிட்டார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு வேண்டுகோள்.
ஐயோ பாவம் என்று நினைத்த ஷங்கர், போகட்டும். கோவையிலேயே நிகழ்ச்சியை நடத்துங்க என்றாராம் தயாரிப்பு நிறுவனத்திடம். இங்கிருந்து நிகழ்ச்சிக்கு வர இசைந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஃபிளைட், தங்கும் ஓட்டல்கள் என்று கொள்ளை கொள்ளையாய் பில்லை கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்தில்.

வொய் திஸ் கொலவெறிடிக்கு -மல்லிகா ஷெராவத் ஆட்டம்


மல்லிகா ஷெராவத் ஆட்டம். எரிச்சலில் சிம்பு என்றே தலைப்பு வைத்திருக்கலாம்mallikasherawatஇந்த செய்திக்கு. அந்தளவுக்கு இந்த மேட்டரில் புதைந்து கிடக்கிறது ஈகோ. தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டுக்கு வேண்டுமானால் இவர் பட்டு மெத்தையாக இருக்கலாம். செங்கல்பட்டு தாண்டினால், அதாருலே.... இடிச்சு வச்ச இஞ்சியாட்டம் என்று ஈசியாக காமெண்ட் அடித்துவிட்டு கலைந்து போகிற அளவுக்கு மொக்கை ஃபிகர்.
ஆனாலும், ரெண்டாவது தமிழ் பட ரவுண்டுக்காக கிட்டதட்ட 50 லட்சம் செலவு செய்து கூட்டி வரப்பட்டார் சிம்புவின் ஒஸ்திக்காக. மியூசிக்கும் பட்டையை கிளப்பியது. டி.ராஜேந்தரும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய கலாசலா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட மல்லிகா ஷெராவத், அதன்பின் அந்த பாடலையும், சிம்புவையும் மறந்தே போனார்.
இந்த புத்தாண்டுக்கு மும்பையிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு ஸ்டார் ஓட்டலில் மல்லிகா ஷெராவத்தின் ஆட்டம் இருக்கிறது. ஆனால் இவர் ஆடப்போவது கலாசலா பாட்டுக்கு அல்ல. சிம்புவின் பரம எதிரி, தனுஷ் ஹிட் அடித்திருக்கும் வொய் திஸ் கொலவெறிடிக்குதான் ஆடப் போகிறாராம். இதை கேள்விப்பட்டத்திலிருந்தே எரிச்சலில் இருக்கிறாராம் சிம்பு.
அப்புறம் ஏம்லே வராது கோவாச்சி? 

வைரமுத்துவுக்கு கமல் தந்த பரிசு


விஸ்வரூபம் படத்திற்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.kamal_viramuthuகமலின் காம்பவுண்டில் கபிலனுக்கும் இடம் உண்டு. முத்துக்குமாருக்கும் சேர் உண்டு. ஆனால் வைரமுத்துக்கு மட்டும் எப்போதும் சிம்மாசனத்தை துடைத்து வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு கமலுக்கும் வைரமுத்துக்கும் அழுத்தமான நட்பு இருக்கிறது.
ஆபிசுக்கு வர முடியுமா என்று அழைத்ததும் ஓடோடிப்போனாராம் கவிப்பேரரசு. அவரிடம், வலிமையான வார்த்தைகளோடு ஒரு பாடல் வேண்டும். ஆனால் அது யாரையும் காயப்படுத்தக் கூடாது என்றாராம் கமல். ரெண்டே நாட்களில் அந்த பாடலோடு கமலை மீண்டும் சந்தித்தார் வைரமுத்து. வியந்து போற்றிய கமல், உள்ளேயிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாராம். பிரித்தால், அதற்குள் ஒரு பேனா.
இது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து செய்யப்பட்டதாம். ஜி-8 மாநாடுகளில் கூட இதில்தான் கையெழுத்து போடுவார்களாம் தலைவர்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த பேனாவை கொண்டுதான் மணிரத்னம் படத்திற்கு பாட்டெழுதியிருக்கிறார் கவிஞர்.

கிளம்பினார் சினேகா கேரளாவில் அதிர்ச்சி


வெற்றிலை பாக்கு, வெட்டிங் கார்டு என்று சினேகாவின் அடுத்த ஸ்டெப், இனிக்கsnehaஇனிக்க இல்லறம்தான். ஆனால் விடைபெறுகிற நேரத்தில் வேதனை தருகிறாரே, அதுதான் ஏனென்றே புரியவில்லை என்கிறது கேரள நாட்டிளம் தகவல் ஒன்று. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்ஷன் ‘பவானி’ எவ்விதத்திலும் அட்ராக்ஷன் ஏற்படுத்தவில்லை தமிழ் ரசிகர்களை. புதிய படங்களும் இல்லாமல் மலையாள கரையோரம் ஒதுங்கிய சினேகா, பத்மகுமார் என்ற இயக்குனரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அறுபது வாட்ஸ் புன்னகையோடு செட்டைவிட்டு கிளம்பிய சினேகா, மறுநாள் வரவேயில்லையாம். வாடிப்போன இயக்குனர் சினேகா தங்கியிருந்த இடத்தை செக் பண்ணினால் பார்ட்டி முதல் நாளே அங்கிருந்து எஸ்கேப். இங்கே தமிழில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க அழைத்தார்கள் அல்லவா? அந்த கோச்சடையான் போட்டோ ஷுட்டுக்கு வந்துவிட்டாராம். பிரசாந்துக்கே தங்கையாக நடித்த சினேகா, ரஜினிக்கு தங்கையாக நடிக்கப் போவதை பற்றியா அதிகம் கவலைப்படப் போகிறார்?
சரி போனவர் போகட்டும் என்று சமாதானப்படுத்திக் கொண்ட கேரள யூனிட், சினேகாவுக்கு பதிலாக ஹரிப்ரியாவை நடிக்க வைத்தார்களாம்.

Friday, 25 November 2011

வேட்டை வேட்டையாட வருகிறது

ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோரின் நடிப்பில் பரபரப்பாக வேட்டை படத்தை டைரக்டர் லிங்குசாமி எடுத்து வருகிறார்.படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் என் முதல் படம் ஆனந்தம். இது ஒரு மல்டி ஹீரோ-ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பையா வெற்றிக்கு பிறகு, வேட்டை கதையை படமாக்க முடிவெடுத்தேன்.

விஜய்யை இதில் நடிக்க வைக்க பேசினேன், தேதிகள் ஒத்து போகவில்லை, அடுத்து சிம்பு இதில் நடிப்பதாக இருந்து சில காரணங்களால் அதுவும் முடியாமல் போனது.

கடைசியில்,வேட்டை ஆர்யாவுக்குன்னு உருவாக்கப்பட்டிருக்கு சும்மா சொல்லக்கூடாது ஆர்யா பிச்சு உதறியிருக்கிறார்.

மேடியை அணுகியபோது,டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ன்னு முதலில் தயக்கம் காட்டினார். ஆனால் திரைக்கதையை படிச்ச உடனே அவருக்கு இருந்த தயக்கம் மறைந்துவிட்டது.ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் இப்போது ஆர்யா-மேடி இருவரும் நண்பர்களாக ரகளை பண்றாங்க என்று டைரகடர் லிங்குசாமி கூறியுள்ளாராம்

தனுஷின் உற்சாகம்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இவர் இசையமைத்த “வொய் திஸ் கொலை வெறி டி” காதல் தோல்விப்பாடல் இணையதள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று  வெற்றி பாடலாக ஒலித்து வருகிறது.
காதல் விரக்தியில் வேதனை ததும்ப ஆண்கள் மட்டுமே வொய் திஸ் கொலை வெறி டி பாடலை பாடுவார்களா? ஏன் இளசுகள் வொய் திஸ் கொலை வெறி டா? என்று பாடமாட்டாங்களா? என்று இயக்குனர் ஐஸ்வர்யா வரைக்கும் சிலர் கேள்வி எழுப்பினார்களாம்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து கூறுகையில், இந்தப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா மேடம், என்னிடம் படத்துக்காக காதல் தோல்வி பாடலைக் கேட்டாங்க, உடனே ஐந்தே நிமிடத்தில் இந்தப்பாட்டுக்கு மெட்டு போட்டு முடிச்சிட்டேன்.
அரை குறை ஆங்கிலம் தெரிந்த தமிழ் இளைஞன், காதல் தோல்வியில் வெம்பி, வெதும்பி பாடுகிற பாட்டை படத்தின் நாயகன் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
பசங்களை விட பெண்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பிக் கேட்கிறார்கள். இந்தப் பாட்டு யார் மனதையும் காயப்படுத்தாது. காதல் தோல்வியில் காதலன் பாடுகிற பாட்டு அவ்வளவு தான்.
இந்தப்பாட்டு வெற்றி பாடலாக ஒலிப்பது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.