விஸ்வரூபம் படத்திற்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
கமலின் காம்பவுண்டில் கபிலனுக்கும் இடம் உண்டு. முத்துக்குமாருக்கும் சேர் உண்டு. ஆனால் வைரமுத்துக்கு மட்டும் எப்போதும் சிம்மாசனத்தை துடைத்து வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு கமலுக்கும் வைரமுத்துக்கும் அழுத்தமான நட்பு இருக்கிறது.
ஆபிசுக்கு வர முடியுமா என்று அழைத்ததும் ஓடோடிப்போனாராம் கவிப்பேரரசு. அவரிடம், வலிமையான வார்த்தைகளோடு ஒரு பாடல் வேண்டும். ஆனால் அது யாரையும் காயப்படுத்தக் கூடாது என்றாராம் கமல். ரெண்டே நாட்களில் அந்த பாடலோடு கமலை மீண்டும் சந்தித்தார் வைரமுத்து. வியந்து போற்றிய கமல், உள்ளேயிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாராம். பிரித்தால், அதற்குள் ஒரு பேனா.
இது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து செய்யப்பட்டதாம். ஜி-8 மாநாடுகளில் கூட இதில்தான் கையெழுத்து போடுவார்களாம் தலைவர்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த பேனாவை கொண்டுதான் மணிரத்னம் படத்திற்கு பாட்டெழுதியிருக்கிறார் கவிஞர்.
No comments:
Post a Comment