மல்லிகா ஷெராவத் ஆட்டம். எரிச்சலில் சிம்பு என்றே தலைப்பு வைத்திருக்கலாம்
இந்த செய்திக்கு. அந்தளவுக்கு இந்த மேட்டரில் புதைந்து கிடக்கிறது ஈகோ. தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டுக்கு வேண்டுமானால் இவர் பட்டு மெத்தையாக இருக்கலாம். செங்கல்பட்டு தாண்டினால், அதாருலே.... இடிச்சு வச்ச இஞ்சியாட்டம் என்று ஈசியாக காமெண்ட் அடித்துவிட்டு கலைந்து போகிற அளவுக்கு மொக்கை ஃபிகர்.
ஆனாலும், ரெண்டாவது தமிழ் பட ரவுண்டுக்காக கிட்டதட்ட 50 லட்சம் செலவு செய்து கூட்டி வரப்பட்டார் சிம்புவின் ஒஸ்திக்காக. மியூசிக்கும் பட்டையை கிளப்பியது. டி.ராஜேந்தரும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய கலாசலா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட மல்லிகா ஷெராவத், அதன்பின் அந்த பாடலையும், சிம்புவையும் மறந்தே போனார்.
இந்த புத்தாண்டுக்கு மும்பையிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு ஸ்டார் ஓட்டலில் மல்லிகா ஷெராவத்தின் ஆட்டம் இருக்கிறது. ஆனால் இவர் ஆடப்போவது கலாசலா பாட்டுக்கு அல்ல. சிம்புவின் பரம எதிரி, தனுஷ் ஹிட் அடித்திருக்கும் வொய் திஸ் கொலவெறிடிக்குதான் ஆடப் போகிறாராம். இதை கேள்விப்பட்டத்திலிருந்தே எரிச்சலில் இருக்கிறாராம் சிம்பு.
அப்புறம் ஏம்லே வராது கோவாச்சி?
No comments:
Post a Comment