Friday, 25 November 2011

வேட்டை வேட்டையாட வருகிறது

ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோரின் நடிப்பில் பரபரப்பாக வேட்டை படத்தை டைரக்டர் லிங்குசாமி எடுத்து வருகிறார்.படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் என் முதல் படம் ஆனந்தம். இது ஒரு மல்டி ஹீரோ-ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பையா வெற்றிக்கு பிறகு, வேட்டை கதையை படமாக்க முடிவெடுத்தேன்.

விஜய்யை இதில் நடிக்க வைக்க பேசினேன், தேதிகள் ஒத்து போகவில்லை, அடுத்து சிம்பு இதில் நடிப்பதாக இருந்து சில காரணங்களால் அதுவும் முடியாமல் போனது.

கடைசியில்,வேட்டை ஆர்யாவுக்குன்னு உருவாக்கப்பட்டிருக்கு சும்மா சொல்லக்கூடாது ஆர்யா பிச்சு உதறியிருக்கிறார்.

மேடியை அணுகியபோது,டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ன்னு முதலில் தயக்கம் காட்டினார். ஆனால் திரைக்கதையை படிச்ச உடனே அவருக்கு இருந்த தயக்கம் மறைந்துவிட்டது.ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் இப்போது ஆர்யா-மேடி இருவரும் நண்பர்களாக ரகளை பண்றாங்க என்று டைரகடர் லிங்குசாமி கூறியுள்ளாராம்

தனுஷின் உற்சாகம்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இவர் இசையமைத்த “வொய் திஸ் கொலை வெறி டி” காதல் தோல்விப்பாடல் இணையதள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று  வெற்றி பாடலாக ஒலித்து வருகிறது.
காதல் விரக்தியில் வேதனை ததும்ப ஆண்கள் மட்டுமே வொய் திஸ் கொலை வெறி டி பாடலை பாடுவார்களா? ஏன் இளசுகள் வொய் திஸ் கொலை வெறி டா? என்று பாடமாட்டாங்களா? என்று இயக்குனர் ஐஸ்வர்யா வரைக்கும் சிலர் கேள்வி எழுப்பினார்களாம்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து கூறுகையில், இந்தப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா மேடம், என்னிடம் படத்துக்காக காதல் தோல்வி பாடலைக் கேட்டாங்க, உடனே ஐந்தே நிமிடத்தில் இந்தப்பாட்டுக்கு மெட்டு போட்டு முடிச்சிட்டேன்.
அரை குறை ஆங்கிலம் தெரிந்த தமிழ் இளைஞன், காதல் தோல்வியில் வெம்பி, வெதும்பி பாடுகிற பாட்டை படத்தின் நாயகன் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
பசங்களை விட பெண்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பிக் கேட்கிறார்கள். இந்தப் பாட்டு யார் மனதையும் காயப்படுத்தாது. காதல் தோல்வியில் காதலன் பாடுகிற பாட்டு அவ்வளவு தான்.
இந்தப்பாட்டு வெற்றி பாடலாக ஒலிப்பது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Thursday, 24 November 2011

காமெடியில் கலக்கும் ஸ்ரீகாந்த்


இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.


பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர்.

முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.

பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.

"உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல். 

என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம். 

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா. ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.

மடையன் படத்தில் சிம்பு



நடிகர் சிம்புவின் ’ஒஸ்தி’ படம் டிசம்பர் 2ம் தேதி வெளியிடத் தயாராக இருக்கிறது. படத்தை தணிக்கை குழுவினர் தணிக்கை செய்து ” யூ ” சான்றிதழ் வழங்கிவிட்டனர். சிம்பு இப்போது  தனது அடுத்த படமான ‘வேட்டை மன்னன்’ படத்திற்க்காக ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறார்.  சிம்பு தற்போது தனது படங்களின் பெயரின் மூலமே ரசிகர்கள் மனதில் எதிபார்ப்பை உண்டாக்கிவிடுகிறார். வேட்டை மன்னனுக்குப் பிறகு சிம்பு ‘மடையன்’ என்ற படத்தில் டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சிம்புவின் ண்பரும் இயக்குனருமான இயக்குனர் கணேஷ் இயக்குகிறார். க்ளவுட் நையன் மூவிஸ் தயாரிக்கிறது.

அஜீத் அடுத்த படம்

பில்லா 2 படத்துக்குப் பிறகு அ‌ஜீத் யார் தயா‌ரிப்பில், இயக்கத்தில் நடிப்பார் என்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.

பில்ல 2 படத்துக்குப் பிறகு அ‌ஜீத் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அவரது இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்திருக்கும் பன்சா படத்தின் ‌ீமேக்கில் அ‌ஜீத் நடிப்பார் எனவும் புரளி கிளப்பினர். ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது.

நாகி ரெட்டியின் விஜயா புரடெகசன் சார்பில் அவரது மகன் வெங்கட ரமணா ரெட்டி தயா‌ரிக்கும் படத்தில் அ‌ஜீத் நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. இந்தப் படத்தை சிறுத்தையை இயக்கிய சிவா இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

Wednesday, 23 November 2011

முருகன் சென்டிமென்ட் பார்க்கும் விஜய்

வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து  தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்துக்கு தலைப்பு தேர்வு செய்வதில் தற்போது பிஸியாக இருகிறார் முருகதாஸ்.  இந்தப்படத்தை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தனியொரு ஆளாக தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஹீரோயின் யார், வில்லன் யார் என்பதெல்லாம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமான முருகதாஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பையில்  முடிவதுபோல திரைக்கதை அமைத்து இருக்கின்றாராம் முருகதாஸ். அதேநேரம் படத்தின்  பெரும்பகுதி மும்பையில் நடைபெற இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நாயகன் கமல் போல நல்ல தாதாவாக விஜய் நடிக்க இருகிறார் என்ற சூடான தகவலைத் தருகிறார்கள் இயக்குனர் வட்டாரத்தில் இருந்து. கதைப்படி இரண்டு ஹீரோயின்கள் தேவை.

படத்தை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட இருபதால்  ப்ரியங்கா சோப்ரா மற்றும் 180 படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் ஆகிய இரண்டு பேர் இப்போதைக்கு பரிசீலனையில் இருபதாகச் சொல்கிறார்கள். இம்மாத இறுதியில் முழுவிவரமும் அதிகார பூர்வமாக அறிவிக்க இருகிறாராம் எஸ்.ஏ.சி!

Tuesday, 22 November 2011

கன்னடப் படத்தில் நமீதா

கன்னடப்படத்தில் நமீதா நடித்து வெளியாகியுள்ள  ஐ லவ் யூ நமிதா,
ஜெயசிம்ம ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதாதான் நாயகி, நாயகன் எல்லாமே.


இந்தப் படத்தில் கதையில் யோகா டீச்சராக வருகிறார் நமீதா. லவ் காலேஜில் (அதாவது லயோலா ஓரியன்டல் வெர்சடைல் எஜுகேஷன் காலேஜ் என்பதன் சுருக்கமாம்) செக்ஸ் வெறியால் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் யோகா ஆசிரியராக வருகிறார் நமீதா. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் போதிக்கிறார். நமீதாவின் போதனையால் மனம் மாறும் மாணவர்கள் கல்விதான் முக்கியம், காமம் பிறகுதான் என்பதை உணர்ந்து, திருந்தி, நல்ல ஸ்கோருடன் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். நமீதாவும் அங்கிருந்து திருப்திகரமாக பேக்கப் செய்கிறாராம்.
படத்தில் நமீதாவுக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியில் நனைய விட்டிருக்கின்றனர். மற்றபடி படம் முழுவதும் அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அதை அழகான கதையோட்டமாக அமைக்காமல் குப்பைத்தனமாக காட்டியிருப்பதால் படம் பப்பரப்பா என்று போயுள்ளது.  நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...