பூமி வெப்பமாவதை தடுக்கவும், தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் மரக்கன்று வனத்துறையினரால், அரசு அலுவலகங்கள், தனியார் நிலங்கள், வீடுகள், தோட்டம், சாலையோரங்களில் மரக்கன்று நடப்பட உள்ளது.மரக்கன்று பெற விரும்புபவர்கள் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்திலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். dfonamakkal@yahoo.co.in
விண்ணப்பிக்கும் நபர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தபின்னரே மரக்கன்றுகள் வழங்கப்படும். வழங்கிய பின் அடிக்கடி வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மந்தாரை, மஞ்சள் கொன்றை, ஜகரெண்டா, செண்பகம், மகிழம், இயல்வாகை, தூங்குமூஞ்சி வாகை, புளி, தபிபியா, தங்க அரளி, வாதுமை, ஆத்துமருது, நெல்லி, நாவல், சிசு, புங்கம், வேம்பு, கடம்பம், பொரசு, தோதகத்தி, மலைபூவரசு, கிரிவிலியா, ஸ்பெத்தோடியா, பூவரசு, தேக்கு, மேபிளவர், பேரடைஸ் மரம், தகரை, டபோபியா, கேஸியா, கேஸியா ஜவானிகா, சிசால்பினியா, அரசு, ஆலமரம், பலா ஆகிய 36 வகையான மரக்கன்றுகளை வனத்துறை நடுகின்றனர்.
மரக்கன்று வேண்டுபவர்கள் வரும் 30ம் தேதிக்குள் மாவட்ட வன அலுவலர், நாமக்கல் வன கோட்டம், பழைய ஆட்சியர் பங்களா, நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment