Tuesday, 15 November 2011

ரஜினி மீண்டும் வேகம் படப்பிடிப்பில்!

ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. எந்திரன் படத்தை அடுத்து இந்த படத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தை தொடங்கும் போதே ரஜினி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியதால் ரஜினி மீண்டும் படப்பிடிப்பு கலந்து கொள்கிறார். இப்படத்தை  கே.எஸ். ரவிகுமார்  இயக்குகிறார். ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.   இந்நிலையில் உடல்நலம் தேறியவுடன் ஷாருக்கானின் ராஒன் படத்திற்காக ஒரு சில மணிநேரம் நடித்தார். பின்பு சென்னையில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு  கமல்ஹாசன் போல் கேரக்டர் ஆர்டிஸ்ட்  கிடையாது. எனது பலமே வேகம் தான். உடலில் வேகம் இருக்கும் வரை  நடிப்பேன் என்றார். இந்நிலையில் பெங்களூரில் ராணா படப்பிடிப்பிற்காக  ரஜினி பெங்களூருக்கு சென்றார். அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்பில் தீபிகா படுகோனுடான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. தமிழ், தெலுக்கு, இந்தி ஆகிய மொழியில் தாயாராகின்றன.

No comments:

Post a Comment