Thursday, 19 July 2012

சுந்தர்சி இயக்கும் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு


பேட்டை புடிச்சமா, பந்தை அடிச்சமா என்றிருந்த கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் திடீரென்று சினிமா ஆசை உந்தித்தள்ள கிரவுண்டை விட்டு ஃபுளோருக்கு வந்தார். வந்த இடத்தில் Sadagopan Rameshசிக்சர் நிச்சயம் என்று எதிர்பார்த்தால், ஒரு பால் கூட அவர் பேட்டில் சிக்கவில்லை. நல்லவேளை... ஸ்டெம்ப் எகிறாமல் இருப்பது அவரது பூர்வஜன்ம புண்ணியம்.
இவரது முதல் படமான பட்டாப்பட்டி பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாக இருந்தாலும், போஸ்டர் காசு கூட தேறவில்லை என்கிறது கலெக்ஷன் ஏரியா. அதன்பின் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் சுந்தர்சி.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்து வரும் மதகஜராஜா படத்தில் சடகோபன் ரமேஷுக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் கொஞ்சம் கலகலப்பான கேரக்டர். ஆள் பார்க்க முசுடாக இருந்தாலும் கேமிராவுக்கு முன்னால் கலகலப்பாக இருக்கிறார் என்கிறது ஷுட்டிங் ஸ்பாட் தகவல்கள்.
(மதகஜ)ராஜா தயவுல ஒரு சின்ன ராஜ்ஜியத்தையாவது கோடம்பாக்கத்துல புடிச்சுக்கோங்க சடகோபன்.

No comments:

Post a Comment