ஒரு சூர்யா வந்தாலே உற்சாகத்தில் உய்..... யடிக்கிற ரசிகர்கள் ரெண்டு சூர்யா வந்தால்
என்ன செய்வார்களோ? அதைக் காண இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ரிலீஸ் எப்போது என்று உறுதியாக சொல்ல முடியாத நெருக்கடி எதிர்பார்க்கிற நமக்கு மட்டுமல்ல, உருவாக்குற கே.வி.ஆனந்துக்கும் இருக்கிறது.
இரண்டு சூர்யா என்பதால் ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை எடுக்க வேண்டியிருந்ததாம். என் நிலைமையாவது பரவாயில்லை. ஒவ்வொரு காட்சியையும் பல முறை பார்த்து பார்த்து நறுக்க வேண்டிய நிலைமை எடிட்டர் ஆன்ட்டனிக்கு. அவர் ரெண்டு சம்பளம் கேட்டார் என்றால் பாருங்களேன் என்றார் கே.வி.ஆனந்த்.
ரெண்டு பேர்ல காஜல் யாருக்கு என்ற அடங்க மாட்டாத கேள்வியை அவரிடம் கேட்டால், இப்பவே ஏன் கேட்கிறீங்க அதையெல்லாம்? அதுதான் சார் க்ளைமாக்ஸ் என்றார் அவர். எஸ்கேப் ஆக அவர் நினைத்தாலும் விடுகிற நிலையில் நாம் இல்லை. விசாரித்த வரையில் ரெண்டு பேரோடும் குடும்பம் நடத்த தயாராகிவிடுவாராம் காஜல். இப்படி ஒரு அதிரி புதிரியான க்ளைமாக்ஸ் படத்தில் இருக்குமா? அல்லது கலாச்சாரம், பண்பாடு என்று ஜகா வாங்குவார்களா தெரியாது
No comments:
Post a Comment