இவர்களது காதல் திருமணம், இருவீட்டாரின் சம்மதத்துடன் முதலில் நிச்சயதார்த்தமும் பிறகு திருமணமும் நடக்கவுள்ளது. ஜனவரி மாதம் திருமணம் என பிரசன்னா வட்டாராங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து நடிகர் பிரசன்னா இன்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
“ சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்," என்று கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment