Wednesday, 9 November 2011

லூர்து மேரியை பார்க்கணுமா? வாங்க...


Thambi Vettothi Sundaramமுதல் படம் கற்றது தமிழ். அந்த பெயரை நிலை நாட்டுவதற்காகவே தமிழ் கற்று தேறிவிட்டார் அஞ்சலி. அக்ஷர சுத்தமாக அவர் பேசும் தமிழ் கேட்டால் அதற்காகவே நாலு வெண்பாவை மெனக்கெட்டு எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கலாம்.
தமிழில்தான் தேறியாச்சே, அப்புறம் வட்டார பாஷையில் கலக்க வேண்டியதுதானே?அதிலும் விடாப்பிடியாக நின்று கன்னியாக்குமரி தமிழ் பேசியிருக்கிறாராம் அஞ்சலி. இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவரப்போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்காகதான் இப்படி ஒரு அர்ப்பணிப்பு. இவரது காரின் மீது கல்வீச்சு நடந்த பின்பும் அப்படத்தில் துணிச்சலோடு நடித்து முடித்துக் கொடுத்தது இன்னொரு அர்ப்பணிப்பு.
கன்னியாக்குமரி பகுதியில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பாத்திரத்தை நிஜமாகவே நேசித்த லூர்து மேரி கேரக்டரில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த லூர்து மேரி இப்போதும் உயிருடன்தான் இருக்கிறாராம். இந்த படத்தை அவர் பார்ப்பாரா என்பது இருக்கட்டும். லு£ர்துமேரியை பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கிறார் அஞ்சலி.
நடிக்கிறேன்னு இறங்கும்போதே நாலா புறத்திலிருந்தும் கல்வீச்சு. இதில் லூர்துமேரியை பார்க்கப் போறேன் என்று கிளம்பினால் என்னாகும்? 'ஆர்வத்தை அடக்கும்மா' என்று கூறிவிட்டார்களாம் யூனிட்டில்.
அதிருக்கட்டும்... படத்தை பார்த்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் தாணு, வியந்து வியந்து பாராட்டினாராம் இயக்குனர் வடிவுடையானை. படம்னா இப்படிதான் இருக்கணும். பெரிய ஹிட்டாகும் என்று அவர் சொல்ல சொல்ல, பூசாரியோட அருள்வாக்கு கேட்ட மாதிரி பரவசத்தோடு திரிகிறார் வடிவுடையான்

No comments:

Post a Comment