Thursday, 10 November 2011

ஜெனிலியாவுக்கு ரெட்


ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் சங்கத்தின் கதவை தட்டும் நடிகர் நடிகைகள் அந்த சங்கம் கேட்கும் சிறு விஷயத்தை கூட மதிப்பதில்லை என்பதற்கு பெரிய உதாரணம் Geneliaஇதுதான். நடிகை ஜெனிலியாவுக்கு தொழில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது தெலுங்கு நடிகர் சங்கம். ஏன் தெரியுமா? ரொம்ப காலமாகவே சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்களாம்.

அதை லெஃப்ட் காதில் வாங்கி ரைட் காது வழியே வெளியேற்றிவிட்டார் அவர். தலைக்குள் ஏற்றாமல் போன அந்த விஷயத்தால்தான் இப்போது தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது ஜெனிலியாவுக்கு.
தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் நடிகர் சங்க கூட்டம் நடந்தால் மறுநாளே ஒரு அறிக்கை வரும். அதில் தவறாமல் குறிப்பிடப்படும் தீர்மானங்களில் ஒன்று இந்த சந்தா மேட்டர். அந்தளவுக்கு சந்தா விஷயத்திலும், அடையாள அட்டை வாங்கும் விஷயத்திலும் அலட்சியம் காட்டி வருகிறார்கள் நடிகர் நடிகைகள்.
இப்படி வாங்காத நடிகர் நடிகைகளை யாரும் புக் பண்ணாதீர்கள். அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்னால் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட்டீர்களா என்று ஒரு வார்த்தை கேளுங்கள் என்று மாறி மாறி எல்லா சங்கத்திற்கும் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது இரு மொழி நடிகர் சங்கமும்

No comments:

Post a Comment