பில்லா 2 படத்தில், வில்லனாக நடிக்கிறார் வித்யூத் ஜம்வால். பாலிவுட்டில் வளரும் நடிகராகத் திகழும் வித்யூத்துக்கு தமிழில் இதுதான் அறிமுகப் படம். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார்.
வித்யூத் ஜம்வால் சமீபத்தில் இந்தியில் வெளியான போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்தவர். களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மாடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார். இவர் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் கூட.
பில்லா-2 முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் 30நாட்களும், 2ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 40 நாட்களும் முடிந்து, தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது

No comments:
Post a Comment