கடந்த சில தினங்களாகவே நடக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் ஜெயம் ரவி.
காலில்
ஏற்பட்ட காயங்கள்தான் காரணமாம். ஏதேனும் விபத்தாக இருக்குமோ என்று
விசாரிப்பவர்களுக்கு கிடைக்கிற தகவல், அவ்வளவு சந்தோஷப்படுவதாக இல்லை.
அவ்வளவும் ஆதிபகவன் படத்திற்காக வாங்கிய அடி.
ஒரு நாளைக்கு ஒரு ஷாட் மட்டுமே எடுத்தால் கூட போதும். அது நினைத்த மாதிரி வரவேண்டும் என்று நினைப்பவர் அமீர். அப்படிப்பட்டவர் இயக்கும் படத்தில் ஃபைட் எப்படியிருக்கும்? விழுந்து புரண்டு விலா எலும்பெல்லாம் நொறுங்கியிருந்தால்தான், அட... பரவால்ல தம்பி என்கிற டைப் அவர். இந்த படத்திற்காக ஜெயம் ரவியை போட்டு புரட்டி எடுத்துவிட்டாராம். டெடிக்கேஷன் என்பதற்காக எவ்வளவுதான் பொறுத்துப் போவது?
அதுவும் இந்த சண்டை காட்சிகளை திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருப்பதால் தடுமாறிப் போனாராம் ரவி. உடல் சார்ந்த வலி ஒருபுறம் என்றால், சில காட்சிகளை சரியாக செய்யவில்லை என்றால் ஸ்பாட்டில் விழும் திட்டுகள் அதைவிட பெரிய வலியை ஏற்படுத்துகிறதாம். எல்லாம் மனம் சார்ந்த வலி.
சாது மிரளுமா? காடு நொறுங்குமா? என்பதுதான் தெரியவில்லை.

No comments:
Post a Comment