ஒரு தெலுங்கு ஹீரோவையும் கூட்டு சேர்த்துக் கொள்வதுதான் இப்போதைய தமிழ்சினிமாவின் ஸ்டைல் போலிருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் கோடம்பாக்கத்தின் சிண்டை பிடித்து குலுக்கி எடுக்கிறது இந்த பழக்கம்.
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்திலும் ஒரு தெலுங்கு ஹீரோவை நடிக்க
உருவம்தான். அவரை மெனக்கெட்டு சென்னைக்கே வரவழைத்தார்கள். ஒரு காபி கஃபேயில் உட்கார வைத்து கதையையும் சொன்னார் வெற்றி மாறன்.
உங்க ஆடுகளம் பார்த்திருக்கேன். அதற்கு முன்னாடி பொல்லாதவன் பார்த்துட்டு ஃபீல் ஆயிருக்கேன். ரெண்டு படத்திற்காக என்ன வேணும்னாலும் செய்யலாம். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். இது உறுதி என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த ராணா, ஆமாம்...இந்த படத்தின் மெயின் ஹீரோவாக நடிக்கப் போறது யாரு? என்றாராம்
கடைசியாக.
அங்கேதான் விழுந்தது விக்கலும் சிக்கலும்.
சிம்பு என்றார் வெற்றிமாறன். அப்படியா? ஸாரி... எனக்கு அவர் கூட நடிக்க பிடிக்கலை என்றாராம் ராணா. எந்த அரையிருட்டில் எங்கு முட்டிக் கொண்டார்களோ, ரெண்டு பேரும்...
No comments:
Post a Comment