Thursday, 19 July 2012

அஞ்சலியா... ஐயய்யோ! அலறும் யங் ஹீரோ


ஏ.சி ரிமோட் கையில் இருந்தும் எக்கச்சக்க அனலில் வாடிக் கொண்டிருக்கிறார்Anjaliவிஷால். 'கலகலப்பு' படத்தை தொடர்ந்து சுந்தர்சி எடுத்துக் கொண்டிருக்கும் 'மதகஜராஜா' படத்தில் விஷால்தான் ஹீரோ. இவருக்கு ஜோடி அஞ்சலி.
படப்பிடிப்பில் அஞ்சலி பக்கம் திரும்புவதே இல்லையாம் விஷால். ஷாட் ரெடி என்றால் மட்டும் கொஞ்சிக் கொள்ளும் இருவரும் 'கட்' என்றதும் காட்டுத்தனமாக விலகி நிற்கிறார்களாம்.
விரல்கள் உரசிக் கொண்டாலே கெமிஸ்ட்ரி, பயாலஜி என்று பீலா விடும் ஜிகினா ஏரியாவில் இப்படி ஒரு அடக்க ஒடுக்கம் எதற்காக? இந்த படத்தின் இன்னொரு ஹீரோயின் விஷாலின் 'வருங்கால வைப்பு நிதி' என்பதால்தான் இத்தனை அலர்ட்டாம்!

அஜீத்தை அதிர வைத்த நடிகர் இது ரிட்டையர்மென்ட் ரிவிட்


அரவிந்த்சாமியும் அஜீத்தும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும்?Aravind Swamyஅழகான இந்த ஃபார்முலாவின் மீது ஜமுக்காளத்தை போட்டு மூடியிருக்கிறார் அரவிந்த் சாமியோவ்... ஏனாம்?
விஷ்ணுவர்த்தன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையை கேட்டு திருப்தியுற்ற அரவிந்த்சாமி, இந்த கதைக்காக நடிக்கிறேன். அப்படியே சம்பளத்துக்காகவும்தான் என்றாராம். சரி சொல்லுங்க எவ்வளவு? என கேட்ட விஷ்ணுவுக்கு விலா எலும்பே ஸ்கிப் ஆகிற அளவுக்கு சிரிப்பு. வேறொன்றுமில்லை, ரெண்டு கோடி கேட்டாராம் அவர்.
தலை தெறிக்க ஓடிய விஷ்ணு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்ல, ஆணியே புடுங்க வேணாம் என்று கூறிவிட்டார் அவர். இப்போது இருபது லட்ச ரூபாய் சம்பளத்தில் அதுல்குல்கர்னி நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல்லு முளைச்ச சீப்பை கல்லுல வச்சுதான் வாரணும்...

விசா மறுப்பு அழுதார் நயன்தாரா


Nayantharaகடந்த சில வாரங்களுக்கு முன் டோலிவுட், கோலிவுட் ஹீரோக்கள் மொத்த பேரும் துபாயில் நடந்த சைமா திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள். அனுஷ்கா, கார்த்திகா, த்ரிஷா என்று முன்னணி நட்சத்திரங்களுடன் சிம்புவும், தனுஷும் கூட கலந்து கொண்டு கலக்கினார்கள்.
இந்த விழாவுக்கு தானும் போக ஆசைப்பட்டாராம் நயன்தாரா. இவரது விசாவை வேண்டுமென்றே தாமதப்படுத்திய சிலர், கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை என்று கையை விரிக்க ஆற்றாது அழுது தீர்த்தாராம் நயன்.
பின்னணியில் விளையாடிய சதிலீலாவதன்கள் யாரோ?

என்னை ஏன் புறக்கணிக்கணும்? தடுமாறும் பார்வதி ஓமணக்குட்


மழையடிச்சும் சூடு போகல கதைதான் பார்வதி ஓமணக்குட்டனுக்கு. அஜீத்தின்Parvathy Omanakuttanபில்லா -2 படத்தில் அறிமுகமாகும் இவருக்கு அந்த படம் வெளிவருவதற்குள் ஆறேழு படங்களிலாவது நடிக்க அழைப்பு வந்திருக்க வேண்டாமா?
ஆனால் ஒரு மிஸ்டு கால் கூட வரவில்லையாம் எந்தக் கம்பெனியில் இருந்தும். இவர் ஏற்கனவே தமிழில் அறிமுகமான ஒரு படம் பூஜையோடு டிராப். இந்த லட்சணத்தில் இப்படியொரு புறக்கணிப்பு.
இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத பார்வதி, கோடம்பாக்கத்தில் பழம் தின்று கொட்டை போட்ட மேனேஜர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம்.
இல்லாத பனை மரத்துல ஏறி, பை கொள்ளாம திராட்சை பறிக்கிற சக்தி கனவுக்கு மட்டும்தான் இருக்கு...

ஹெட்வெயிட் இல்லாத ஹெட் லைட் நடிகை...


குங்குமப்பூவும் கொஞ்சம் 'ப்ரா'வும் என்று டைட்டில் வைத்திருந்தால் கூட கொஞ்ச நாட்கள் ஓடியிருக்கும். ஆனால் 'கொஞ்சு புறாவும்' என்று Dhananyaவைத்து விட்டார்கள் அப்படத்திற்கு.
நல்லவேளை, அந்த படத்தினால்தான் நமக்கு தனன்யா கிடைத்தார். அடிப்படையில் மருத்துவம் படிக்கும் மாணவி இவர்.
அகலமான கண்கள், அழகான நாசி என்று பார்த்தவுடன் சட்டென்று பிடித்துப்போகிற முகம் என்பதால், கூரான மூக்கோடு தனன்யாவை கொத்தத் திரிந்தனர் கோடம்பாக்கத்தில். 'நடிப்பு அப்புறம்தான். படிப்பை முடிச்சுர்றேன் முதலில்' என்று தப்பித்து ஓடிய தனன்யாவை வம்படியாக இழுத்து வந்திருக்கிறார்கள் 'வெயிலோடு விளையாடு' படத்தில்.
ஹீரோயினா இந்த பொண்ணை நடிக்க வைக்கலாமே என்று நினைத்து கேட்டபோது, 'படிக்கணுமே சார்' என்றார் தனன்யா. 'நடிச்சிகிட்டே படிம்மா. உன்னை யாரு டிஸ்ட்ரப் பண்ணப்போறா?' என்று கன்வின்ஸ் பண்ணிதான் நடிக்க வச்சோம் என்றார் இப்படத்தின் இயக்குனர் என்.வி.ராம்குமார். தனன்யாவை காதலிக்கும் ஹீரோ, 'அங்காடி தெரு'வின் நாயகன் மகேஷ்.
'இந்த கதையை கேட்கும்போதே நாலு முறை எழுந்திருச்சு வெளியில் வந்து ஃபீல்Veyilodu Vilayaduபண்ணும்படி ஆகிருச்சு. அப்படியே என் கதைங்க அது. படத்தில் நான் ஃபுட் பால் பிளேயரா வர்றேன். கதையே இந்த விளையாட்டை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டதுதான்' என்றார்.
கார்த்திக் ராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளர் என்பதால் சுலபமாக இசைஞானி இளையராஜாவை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார்கள். 'அந்த ஒரு பாடல்ல நான் நடிக்க கொடுத்து வச்சுருக்கணும்' என்றார் மகேஷ்.
பிறக்கும்போதே பளிச்சுன்னு எரியுற ஹெட் லைட்டோட பிறந்திருக்கும் போலிருக்கு... என்று அங்கிருந்த நடிகர் இளவரசு தனன்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் அறிமுகம் கொடுக்க, அந்த ஹெட் லைட்டை நாலாப்புறமும் சுழற்றி சுழற்றி பேசினார் தனன்யா.
தனன்யாவுக்காக மொட்டை வெயிலா இருந்தாலும் ரசிக்கலாம்!

ஏன் விழுந்தது தர்ம அடி? டாப்ஸி மேட்டரில் திருப்பம்


டாப்ஸியால் அடித்துக் கொண்ட இரு நடிகர்களும் எங்கேயிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இது தொடர்பான Tapseeபரபரப்பும் டக்கென்று அமுங்கிவிட்டது. பெரிய இடத்து சமாச்சாரம். போதும் நிறுத்தி விடலாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அட்வைஸ் போனதாலும் இந்த தகராறு கமுக்கமாகியிருக்கலாம்.
'என்னைக்கு இருந்தாலும் எங்க ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும். மவனே மரியாதையா வாபஸ் வாங்கிரு' என்றும் மகத்துக்கு டார்ச்சர் போனதாக தகவல். முள்ளை முள்ளால எடுக்கிறாங்களோ, கல்லை கல்லால அடிக்கிறாங்களோ, இந்த பிரச்சனையில் மகத் தாக்கப்பட்டது எதனால் என்கிற விஷயம் மட்டும் இப்போது தெள்ளந் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஏனாம்?
டாப்ஸியும் மகத்தும் நெருங்கி பழகி வந்த நேரத்தில் டாப்ஸிக்கே தெரியாமல் நிறைய வீடியோ காட்சிகளை எடுத்து வைத்திருந்தாராம் மகத். அதையெல்லாம் யூ ட்யூப்ல போட்டுருவேன் மிரட்டினாராம். இதையெல்லாம் சொல்லி மனோஜிடம் டாப்ஸி அழுததால்தான் இந்த தர்ம அடி விழுந்ததாம்.
ஐயா மகத்து... என்னதான் எக்சாம்ப்பிள் இருந்தாலும் சிம்பு ட்ரீட்மென்ட் சில இடத்துலதான் செல்லும்!

வில்லனாகவும் தயார் ஹீரோவுக்காக ஒரு கேன்வாஸ்


தந்தை யுனிவர்சிடியாக இருந்தால் பிள்ளை டூடோரியல் லெவலுக்காகவாவதுShakthiஇருக்க வேண்டுமல்லவா? இங்கு பல வாரிசு நடிகர்களுக்கு அங்குதான் பிரச்சனை. வரும்போதே வால்டர் தேவாரமாக வருவார்கள். ரெண்டே படத்தில் 'ஏட்டு' போலாகி ஏக்கமாக திரிவார்கள். அப்படிதான் ஆகிவிட்டது பிரபல இயக்குனர் பி.வாசுவின் புதல்வர் ஷக்தியின் நிலையும்.
வந்த புதிதில் அஜீத்தையும் விஜய்யையும் மிக்ஸ் பண்ணிய அழகு என்று வர்ணித்த அதே வாய்கள், அதன்பின் வேறு என்னென்னவோ மாதிரியெல்லாம் பேச ஆரம்பித்திருந்தது. இந்த உண்மையை சற்று லேட்டாக புரிந்து கொண்டிருக்கிறார் ஷக்தி.

கோடம்பாக்கத்தில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கும் ஷக்தியின் ஆதரவாளர்கள், 'சார் வில்லனா நடிக்கவும் தயாராதான் இருக்காரு. வாய்ப்பிருந்தா சொல்லுங்க' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் ரீலீசுக்கு தயாராக நிற்கிறது.
சார் வில்லனா அறிமுகம் ஆவதற்குள், ஹீரோ என்கிற பீரோவை வந்த விலைக்கு தள்ளிவிடுவதுதான் சேஃப்ட்டி!