Thursday, 19 July 2012

அமிதாப்புக்கு ஜோடியாகிறார் குஷ்புவின் அடுத்த ஸ்டெப்!


அறிவாலயத்திற்காக அரசியல், சுய லாபத்திற்காக சினிமா என்று இரட்டை குதிரை சவாரி செய்யும் குஷ்புவுக்கு ரெண்டு குதிரையையும் சரியாக மேய்க்கKushbooதெரிந்திருக்கிறது. மீட்டிங், போராட்டம், ஜெயில், பெயில் என்று சகல வித்தைகளையும் அரசியலில் காட்டிக் கொண்டிருக்கும் குஷ்பு அதற்காக சினிமாவையும் விட்டுவிடவில்லை. இது போதாதென்று மானாட மயிலாடவில் ஜட்ஜ் பொறுப்பும் கூடுதலாக சேர்ந்து விட்டது. (ஏதோ இ.பி.கோவை கரைச்சு குடிச்ச மாதிரி இவங்க பண்ணுற அட்டகாசம்? ஹவ்வவ்வவாஆ....)
எதற்கும் அசராத குஷ்பு இப்போது நடிப்பிலும் இறங்கியிருக்கிறார். தெரிந்த தொழில்தானே, இதிலென்ன ஆச்சர்யம் என்பவர்களுக்கு... இவ்வளவையும் கவனித்துக் கொண்டு குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துகிற அம்மாவாக இருப்பது கஷ்டமல்லவா? அதையும் திறம்பட செய்து கொண்டிருக்கிறார் அவர். எவ்வளவுதான் முக்கியமான காட்சியென்றாலும் ஆறு மணிக்கு பேக்கப் சொல்லிவிடுவாராம். அதற்கு பிறகு அது அவரது குழந்தைகளுக்கான நேரம்.
சரி... சென்னையில் இருக்கும்போதுதான் இதெல்லாம் சாத்தியம். இந்தியில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாரே, என்ன பண்ணுவாராம்? இந்த கேள்வி இப்போது ரசிகர்கள் மத்தியில் எழப்போகிறது. டைரக்டர் ரேவதி வர்மா இயக்கவிருக்கும் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் குஷ்பு. அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா? அமிதாப்புக்கு!
அம்மாவுக்கு டெல்லி அரசியல் மீதும் ஒரு கண் இருக்கோ, என்னவோ?

பத்து கோடியா, வாவ்... ஒரு விஸ்வரூப பாய்ச்சல்


புதுப்படங்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது ஜெயாViswaroopamதொலைக்காட்சி. கோச்சடையான், துப்பாக்கி, மாற்றான் என்று வேகம் காட்டும் ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் மட்டும் சிக்கவில்லை.
காரணம் கமல். ஆரம்பத்திலிருந்தே விஜய் தொலைக்காட்சி மீதுதான் அவருக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் தற்போதைய அவரது முயற்சிக்கு முழு மூச்சாக தோள் கொடுத்திருக்கிறதாம் விஜய்.
கமலின் விஸ்வரூபத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம் அவர்கள். சுமார் பத்து கோடி என்று காதை கடிக்கிறார்கள். இந்த அடங்காத விலையை கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறது பிற சேனல் வட்டாரங்கள். இதுல பாதி கேஷ் ரொக்கம். மீதி கேஷ் விளம்பரத்துக்கு என்று பிரித்துக் கொண்டார்களாம்.
நிகழ்ச்சியிலும் சரி, மகிழ்ச்சியிலும் சரி, ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்கிற அளவுக்கு சேனலோடு சினேகம் வளர்க்கிறார் கலைஞானி.

கண்டிப்பா கிளாமர் வேணும்... பிடிவாதம் பிடிக்கும் ஸ்ரே


என்னது... படத்துல எனக்கு கிளாமர் ரோல் இல்லையா? அப்படின்னா உங்க படமேshreyaவேணாம்' என்கிற அளவுக்கு திறந்த புத்தமாக திரிபவர் ஸ்ரேயா. அப்படி ஒரு அசாத்திய கொள்கையால் இவர் கைவிட்ட படங்கள் ஆறேழு இருக்கும்.
இந்த கவர்ச்சிக் கொள்கையில் கொசு மருந்து அடித்து ஸ்ரேயாவை லபக்கி விட்டார் டைரக்டர் ரூபா ஐயர். இவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'சந்திரா' என்ற படத்தில் ஸ்ரேயாவின் நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் முந்தானை சரிய சரிய ஸ்ரேயா வரும் காட்சிகள் ஒன்றிரண்டு படம் பார்க்கும் ரசிகர்களை ராத்தூக்கம் இல்லாமல் செய்துவிடும் என்கிறார்கள். இந்த சீன்கள் கூட ஸ்ரேயாவின் விருப்பத்தின் பேரிலேயே வைக்கப்பட்டதாம்.
வெத்தல கொடி வேர்ல சுண்ணாம்பை கரைச்சு ஊத்துனா மாதிரிதான் அமையுது சில பொருத்தங்களும்!

Monday, 26 March 2012

சங்கீத பிட்டு,சம்மதித்தார் நயன்

தாம்பூலத்தை மென்று தாம்பாளத்தில் துப்பினாலும், அதையும் ஆரத்தியா மதிச்சு ஆராதிக்கறதுதான் Simbu - Nayantharaகாதலின் சக்தி. இந்த சக்தி இப்போது இன்னும் முத்திப் போயிருக்கிறது சிம்புவிடம். இல்லையென்றால் பழைய பாசத்தில் வலை வீசிக் கொண்டிருப்பாரா?
இவரே இசையமைத்து பாடிய லவ் ஆங்த்தம் ஆல்பத்தில் வருகிற ஒரே ஒரு சங்கீத பிட்டுக்கு நயன்தாராவை ஆட அழைத்தாராம். படத்தில் என்னோடு சேர்ந்து நடிக்கலைன்னாலும் பரவாயில்லை. இந்த ஆல்பத்தில் ஒரு சீனுக்கு தலை காட்டினால் போதும் என்றாராம். இவ்வளவுக்கு பிறகும் கர்ஜனை செய்ய நயன் என்ன லயனா?
வரம் கொடுக்க தயாராகிவிட்டதாம் தேவதை.
சிம்பு பொண்ணு பார்க்கிற நேரத்தில் இதென்ன புது கலாட்டா?

அந்தகால ஸ்ரீதேவி அடங்காத சர்ச்சை ஒன்று

யானை எடை மிஷின்ல ஏறிய மாதிரி, மனசு கொள்ளாத வெயிட்டோடுதான் நடந்து கொள்கிறார் 'அந்தகால' ஸ்ரீதேவி. (மயிலு ஆற்றை Srideviகடக்குற சீனை இப்ப பார்த்தாலும், பாக்குறவாளுக்கு மூச்சு பிடிப்பே வரும் தெரியுமோ?) முன்பெல்லாம் மும்பையை சுற்றியே ரவுண்டடித்து வந்த இந்த சிவகாசி பொண்ணு(?) இப்ப அடிக்கடி சென்னை பக்கமும் ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது மகளை பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு.
பொண்ணு மேலே வரணும்னு ஆசைப்படுறது எல்லா அம்மாக்களுக்கும் பொதுவான விஷயம்தான். ஆனால் இவரும் ஒரு பொண்ணு மாதிரியே டிரஸ் கோடுடன் வருவதுதான் ஒரு அடங்காத லுக்கை கொடுக்கிறது. இதை மேலோட்டமாக ரசித்துவிட்டு போகாமல் ஒரு பெரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கின்றன சில அமைப்புகள்.
மும்பையை சேர்ந்த சில பெண்கள் அமைப்பினர், 'இனிமேல் அவர் எந்த விழாவுக்கு வந்தாலும் அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணிட்டு வரணும். அவர் போடுற மிடி தொடை வரைக்கும் காட்டுது. அவரு வயசுக்கு இது சரியல்ல' என்கின்றன.
மயிலு... ஒரு தடவ பழைய படத்தை காட்டும்மா அவங்களுக்கு.

Tuesday, 3 January 2012

கவர்ச்சி நடிகை திறப்பு கணவரே ஊக்குவிப்பு


கல்யாணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பீங்களா? என்ற கேள்வியை தொடுக்காமல்Swetha Menonஎந்த நடிகையையும் தாலிக்கட்டிக் கொள்ள விடுவதில்லை நிருபர்கள். அதிலும் சிலர், அவரு அனுமதிச்சா... என்று நுனிப்பல்லை கடித்துக் கொண்டே நாணப்படுவதை பார்க்க வேண்டுமே? அந்த சன் லைட்டை கருத்துவிடும்.
கேரள, கர்நாடக, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிப் படங்களின் திம்சு கட்டை ஸ்வேதா மேனனின் கல்யாண அறிவிப்பில் நிருபர்கள் இப்படியும் கேட்டிருக்கலாம். 'கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியா நடிப்பீங்களா?'
இதற்கு அவர் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் தான் சொல்ல வேண்டிய பதிலை செய்தே காட்டியிருக்கிறார். ஸ்ரீவத்சன் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா, வசந்த பாலன் இயக்கிக் கொண்டிருக்கும் அரவான் படத்தில் விலைமாதுவாக நடித்து வருகிறார். பூசாரி வேஷம் போட்டுக் கொண்டு பூணூல் போட மாட்டேன் என்றால் விடுவார்களா?
அரையிருட்டு, முக்கா இருட்டு என்று ராத்திரி நேரத்து தந்தூரியாக்கிவிட்டார்களாம் ஸ்வேதாவை. வேடிக்கை என்னவென்றால் மிஸ்டர் ஸ்ரீவத்சனும் இந்த காட்சிகளை எடுக்கும்போது அருகிலிருந்து ஆதரவு கொடுத்ததுதான். 'என் கணவர் என்னை ரொம்பவே புரிஞ்சு வைச்சிருக்காரு. கவர்ச்சி காட்சியில் எனக்கு என்ன வேணும் (வேணும்னா, வேணாம்னா...?) என்பதை கூட அருகிலிருந்து கவனிக்கிறார்னா பாருங்களேன்' என்றார் ஸ்வேதா.
பொண்டாட்டி பூரிக்கட்டையா இருந்தா, புருஷன் என்பவன் சப்பாத்திதான்.

Wednesday, 21 December 2011

நண்பன் இசைவெளியீடு் கோவையில் ஏன்?


பாடல் வெளியீட்டு விழாக்களை கோடம்பாக்கத்தின் எல்லையை விட்டு வெளியேharris_jayarajநடத்துவதில் அலாதி ஆனந்தம் கொள்கிறார்கள் சினிமாக்காரர்கள். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் என்று எங்கெங்கோ போய் இந்த ஆடியோ விழாக்களை நடத்தும் சினிமாக்காரர்கள் மத்தியில், நாலு ஸ்டெப் தள்ளி விழாவை நடத்தப் போகிறார் ஷங்கர். இவரது நண்பன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயமுத்துரில் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவை ஏன் கோவையில் வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது கடைசியில்...
எதிர்வரும் 23 ந் தேதி கோவை எச்ஐடி காலேஜ் வளாகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் படத்தின் ஹீரோயினான இலியானாவும் கலந்து கொள்ளப் போகிறாராம். இப்பவே அரங்கத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று விற்க ஆரம்பித்து விட்டார்களாம் சிலர்.
இப்படி ஒரு விழாவை நடத்த முடிவு செய்தவுடன், அதை என்னோட மியூசிக் கான்செர்டுக்கு நடுவில் வச்சா என் நிகழ்ச்சிக்கும் கூட்டம் வருமே என்றாராம் ஹாரிஸ் ஜெயராஜ். உலகம் முழுக்க சுற்றி இப்படி ஒரு இசை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்திருந்தார் ஹாரிஸ். ஆனால் முதல் நிகழ்ச்சியே படு பெயிலியர். இதனால் அதிருப்தியுற்ற அவர், வெளிநாட்டில் நடைபெறவிருந்த அத்தனை நிகழ்ச்சியையும் கேன்சல் செய்துவிட்டார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு வேண்டுகோள்.
ஐயோ பாவம் என்று நினைத்த ஷங்கர், போகட்டும். கோவையிலேயே நிகழ்ச்சியை நடத்துங்க என்றாராம் தயாரிப்பு நிறுவனத்திடம். இங்கிருந்து நிகழ்ச்சிக்கு வர இசைந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஃபிளைட், தங்கும் ஓட்டல்கள் என்று கொள்ளை கொள்ளையாய் பில்லை கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்தில்.